This Article is From Dec 22, 2019

நாட்டின் பல்வேறு இடங்களில் தடைகளைத் தாண்டி CAA-வுக்கு எதிராக தொடரும் போராட்டம்: 10 Points!

Citizenship (Amendment) Act: சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு அருகே, போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 மாணவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்

நாட்டின் பல்வேறு இடங்களில் தடைகளைத் தாண்டி CAA-வுக்கு எதிராக தொடரும் போராட்டம்: 10 Points!

Citizenship Amendment Act: குடியுரிமை திருத்தச் சட்டம், 2019-ன் மூலம் முதன்முறையாக மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஹைலைட்ஸ்

  • டெல்லி ஜாமியா பல்கலையில் போராட்டம் தொடர்கிறது
  • உத்தர பிரதேசத்தில் பல இடங்களில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது
  • மத்திய பிரதேசத்திலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது
Lucknow:

CAA Protests - டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியாவில் 7வது நாளாக, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அங்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதில் பல மாணவர்கள் தாக்கப்பட்டனர். இந்தியா முழுவதிலும் போலீஸின் அடக்குமுறை கண்டனத்துக்கு உள்ளானது. ஜாமியாவைப் போலவே உத்தர பிரதேசத்தின் ராம்பூரிலும் போராட்டங்கள் அரங்கேறியுள்ளன. அங்கு போலீஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல். உத்தர பிரதேசத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களால் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 35க்கும் மேற்பட்டோருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாட்டில் நடக்கும் போராட்டங்கள் குறித்து 10 முக்கிய தகவல்கள்:

1.ராம்பூரில் நடந்த மோதலைத் தொடர்ந்து மொபைல் மற்றும் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. 

2.சென்னை சென்டரல் ரயில் நிலையத்துக்கு அருகே, போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 மாணவர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

3.லக்னோவில் போராட்டக்காரர்களுக்கு எதிராக போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரழந்தனர். அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க உள்ளனர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள்.

4.அதே நேரத்தில் உத்தர பிரதேசத்தின் டிஜிபி, ஓ.பி.சிங், “நாங்கள் ஒரு தோட்டைவைக் கூட பயன்படுத்தவில்லை. எங்களால் யாரும் இறக்கவில்லை,” என்று கூறியுள்ளார். இன்னொரு போலீஸ் அதிகாரியோ, “துப்பாக்கிச்சூடு நடந்திருந்தால் அது போராட்டக்காரர்கள் தரப்பிலிருந்தே நடத்தப்பட்டிருக்கும்,” என்று கருத்து கூறியுள்ளார். 

5.உத்தர பிரதேசத்தின் 13 மாவட்டங்களில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. பல மாவட்டங்களில் கும்பலாகக் கூடுவதற்குத் தடைவிதித்து, இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. 

6.நேற்று டெல்லியில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் அசாத் தலைமையில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. நேற்று மாலையும் டெல்லியில் போடப்பட்டுள்ள தடைகளைத் தாண்டி போராட்டக்காரர்கள் வீதியில் வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். 

 7.நேற்று மாலை டெல்லி கேட்டிற்கு அருகில் போலீஸுக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. ஒரு கார் இந்த சம்பவத்தில் கொளுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் குறைந்தபட்சம் 36 பேருக்குக் காயம் ஏற்பட்டிருக்கலாம் எனத் தகவல்.

8.கைதுக்குப் பின்னர் போராட்டக்காரர்களில் பலர் டெல்லி போலீஸின் தலைமையிடத்துக்குச் சென்று, கைது செய்துவர்களை விடுவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். 

9.மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியதால், அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

10.குடியுரிமை திருத்தச் சட்டம், 2019-ன் மூலம் முதன்முறையாக மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத ஒடுக்குமுறைக்கு ஆளாகும் 3 வெளிநாட்டவர்களுக்கு இந்த சட்டத் திருத்தம் உதவும் என்று மத்திய அரசு சொல்கிறது. ஆனால் அதை எதிர்ப்பவர்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பதாகவும் சட்ட சாசனத்திற்கு எதிராக இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். 

.