மூன்று முஸ்லீம்களிடம் காவல்துறை கண்காணிப்பாளர் அகிலேஷ் நாராயண் சிங் பேசும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.
Lucknow: மேற்கு உத்தர பிரதேசத்தின் முக்கிய நகரமான மீரட்டைச் சேர்ந்த மூத்த காவல்துறை அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை வகுப்புவாதத்தை தூண்டும் வகையில் பேசிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
வன்முறை போராட்டம் முடிந்த நேரத்தில் தொழுகை முடித்து வந்த மூன்று முஸ்லீம்களிடம் காவல்துறை கண்காணிப்பாளர் அகிலேஷ் நாராயண் சிங் பேசும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. அதில், மூவரும் “ தொழுகை முடித்து வருவதாக கூறுகிறார்கள். நீங்கள் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என்றுகூறுகிறார். அவர்களும் “ நீங்கள் சொல்வது சரிதான்” என்று முணுமுணுக்கிறார்கள்.
“தொழுகைக்கு செல்வது நல்ல விஷயம். ஆனால் இந்த கருப்பு மற்றும் நீல நிற பேட்ஜ்கள் அணிந்திருந்தால் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்” என்று முஸ்லிம் ஆண்களிடம் கூறுகிறார்.
நீங்கள் இங்கு வாழவிரும்பவில்லை என்றால் போய்விடுங்கள். நீங்கள் இங்கு இருப்பீர்கள் ஆனால் வேறு எதாவது புகழினை பாடுவீர்கள்” என்று காவல்துறை அதிகாரி கூறுகிறார்.
காவல்துறை அதிகாரி அம்மூவரிடமும் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொருத்தரை சிறைக்கு தூக்கி எறிவேன் என்று கூறுகிறார்.
அதன்பின் “அனைவரையும் அழிப்பேன்” என்று கூறி கையெழுத்திடுகிறார். எந்த சூழல் காவல்துறை அதிகாரியை வகுப்புவாத கோபத்திற்கு வழி வகுத்தது என்று தெரியவில்லை. “பாகிஸ்தானை ஆதரிக்கும் வகையில் அறிக்கைகள் வெளியானதையொட்டி சமூக விரோத சக்திகள் யார் என்பதை அறிய வந்ததாக” தெரிவித்துள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டங்கள் மீரட்டில் வன்முறையில் முடிந்தது. பலர் இறந்தனர் துப்பாக்கி சூட்டு காயங்களினாலே அவர் இறந்தனர் என்பது குறிப்பிட்டத்தக்கது. முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் போராட்டதை ஒடுக்கியது குறித்த செயல்களை பெருமையாக நியாயப்படுத்தியும் உள்ளார். இதனை ட்விட் பதிவாக முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
“ஒவ்வொரு கலகக்காரரும் அதிர்ச்சியடைகிறார்கள். யோகி ஆதித்யநாத் அரசின் கண்டிப்பைக்கண்டு அனைவரும் மெளனமாகிவிட்டார்கள். பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் எவரும் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வன்முறை போராட்டக்காரர்களும் அழுவார்கள். உத்தர பிரதேசத்தில் நடப்பது யோகி அரசாங்கம்” என்று முதலமைச்சர் அலுவலகம் தன் ட்விட்டர் பக்கத்தில் ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளது.
#TheGreat_CMYogiஎன்ற ஹேஷ் டேக் பயன்படுத்தப்பட்டது.