हिंदी में पढ़ें Read in English
This Article is From Dec 21, 2019

பீம் ஆர்மி தலைவர் உட்பட 40 பேர் டெல்லி போலீசாரால் கைது!

சிறார்களின் கைகள் வீங்கியதாகவும், தலையில் காயமடைந்துள்ள ஒரு சிறுவனின் சிகிச்சைக்காக டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் மருத்துவர்கள் என்டிடிவிக்கு தெரிவித்தனர்.

Advertisement
இந்தியா Edited by
New Delhi:

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த வன்முறை சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 40 பேரை விடுவிக்கக்கோரி ஏராளமான ஆர்பாட்டக்காரர்கள் டெல்லி தலைமை காவல்நிலையத்திற்கு வெளியே ஏராளமான போராட்டக்காரர்கள் இரவிலும் கூடியிருந்தனர். 

இதனிடையே, பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள 40 பேரில் 8 பேர் 14 முதல் 15 வரை உள்ள சிறார் ஆவார்கள். அவர்களை விடுவிக்ககோரி ஆர்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து, அவர்களை பெற்றோரை காவல் நிலையம் வந்து அழைத்துச்செல்லுமாறு காவல்துறையினர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, இதுவரை 6 சிறார்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

சிறார்களின் கைகள் வீங்கியதாகவும், தலையில் காயமடைந்துள்ள ஒரு சிறுவனின் சிகிச்சைக்காக டெல்லியின் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் மருத்துவர்கள் என்டிடிவிக்கு தெரிவித்தனர்.

Advertisement

முன்னதாக, பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் டெல்லி ஜும்மா மசூதியில் இருந்து ஜந்தர் மந்தருக்கு நேற்று பேரணியாக செல்ல இருந்தார். பேரணிக்கு போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி பேரணி நடைபெறும் என்று அறிவித்ததால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, ஜந்தர் மந்தருக்கு பேரணியாக செல்ல ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

அப்போது ஆசாத்தை போலீசார் கைது செய்தனர். இருப்பினும் போராட்டக்காரர்கள் கோஷத்துடன் ஜந்தர் மந்தர் நோக்கி சென்றனர். அப்போது ஆசாத் போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து பேரணியில் புகுந்தார். பேரணியின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டது.

Advertisement

தரியாகஞ்ச் என்ற பகுதியில் போராட்டக்காரர்களை போலீசார் தடுத்தனர். அப்போது ஆசாத் மீண்டும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அங்கு போலீசார் மற்றும் போராட்டக்காரர்கள் இடைய மோதல் ஏற்பட்டது. இதனால், போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கலையவில்லை.  போலீசாரிடம் இருந்து ஆசாத் மீண்டும் தப்பி சென்றார்.

Advertisement