அந்த வீடியோவில் முகமூடி அணிந்த நபர் ஒருவர் துப்பாக்கியை நீட்டிய படி சுற்றிவருகிறார்.
New Delhi: உத்தர பிரதேசத்தின் மீரட் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த போராட்டத்தின் போது, இரண்டு நபர்கள் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். இதுதொடர்பாக வெளியாகியுள்ள அந்த வீடியோவில், ஊதா நிற மேல்சட்டை அணிந்த நபர் ஒருவர் துப்பாகியுடன் சுற்றி வருகிறார்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, டிச.19 மற்றம் 21ம் தேதி வரை நடந்த போராட்டத்தின் போது இது போன்ற வன்முறை கும்பல்கள் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கின்றனர். கடந்த வாரத்தில் உத்தர பிரதேசத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக மீரட்டிலே 6 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மாநில போலீசார் தாங்கள் பிளாஸ்டிக் பெல்லட்ஸ் மற்றும் ரப்பர் குண்டுகள் மற்றுமே பயன்படுத்தியதாக கூறிய நிலையில், உயிரிழந்தவர்களின் பலரின் உடல்களை குண்டு காயங்களே ஏற்பட்டிருந்தது. 20வயது சிவில் சர்வீஸ் ஆர்வலர் ஒருவர் இறந்த பின்னரே துப்பாக்கிச்சூடு பிஜ்னூர் பகுதியில் மட்டும் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வன்முறை நடந்த பெரும்பாலான பகுதிகளில் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட செயல்களில் காவல்துறையினரே ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு வீடியோவில், முகமூடி அணிந்த நபர் ஒருவர் துப்பாக்கியுடன் சுற்றி வருகிறார்.
எனினும், மாநில துணை முதல்வர் தினேஷ் ஷர்மா கூறும்போது, போலீசாருக்கும் இதில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். 21 மாவட்டங்களில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் இதுவரை 288 போலீசார் காயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வன்முறை நடந்த இடங்களில் இருந்து 500க்கும் அதிகமான தடைசெய்யப்பட்ட தோட்டாக்களை போலீசார் மீட்டுள்ளதாகவும் ஷர்மா தெரிவித்துள்ளார். முன்னதாக நேற்றைய தினம், லக்னோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசும்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த வரும் போராட்டத்தின் போது ஏற்படும் வன்முறையில் பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் கூறும்போது, உத்தர பிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் வீட்டிலேயே உட்கார்ந்து, எதிர்கால தலைமுறையினருக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் பொது சொத்துக்களை அழித்தது சரிதானா, இல்லையா என்று தங்களைக் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.
நாட்டில் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலுக்கு உரிமை உண்டு என்பதை மனதில் கொள்ளுமாறு போராட்டக்காரர்களிடம் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மேலும்,சிறப்பாக செயல்பட்டதாக உத்தர பிரதேச போலீசாருக்கு அவர் பாராட்டும் தெரிவித்தார்.