ரகுராஜ் சிங் உத்தர பிரதேசத்தில் தொழிலாளர் அமைச்சராக உள்ளார்.
Aligarh: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு எதிராக கோஷங்களை எழுப்பும் மக்கள் “உயிருடன் புதைக்கப்படுவார்கள்” என்று உத்தர பிரதேச அமைச்சர் ரகுராஜ் சிங் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் 2019க்கு ஆதரவை திரட்டுவதற்காக அலிகரில் நடந்த பேரணியில் உரையாற்றிய அமைச்சர் ஞாயிற்றுக்கிழமை இதனைத் தெரிவித்தார்.
“நீங்கள் பிரதமர் நரேந்திர மோடி அல்லது முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது கோஷங்களை எழுப்பினால் நான் உங்களை உயிருடன் அடக்கம் செய்து விடுவேன்” என்று மிரட்டினார்.
சிஏஏக்கு எதிராக அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டங்களை அவர் குறிப்பிட்டு அப்போது பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பபட்டது. அதனால் குறிப்பிட்டு கூறினார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது “இந்த ஒரு சதவீத மக்கள் சிஏஏவை எதிர்க்கின்றனர். அவர்கள் இந்தியாவில் தங்கியிருக்கிறார்கள். எங்கள் வரிகளை சாப்பிட்டு எங்கள் தலைவர்களுக்கு எதிராக ‘முர்தாபாத்' என்று கோஷங்களை எழுப்புகிறார்கள். இந்த நாடு அனைத்து மத மக்களுக்கும் சொந்தமானது. ஆனால் அதற்கு பிரதமருக்கோ அல்லது முதலமைச்சருக்கோ எதிராக ஏற்றுக் கொள்ள முடியாது”
இந்தியாவின் முதல் பிரதமர் நேருவை தாக்கியும் பேசினார். “நேருவின் சாதி என்ன? அவருக்கு ஒரு ‘காந்தன்' என்பது இல்லை என்று கூறினார்.
ரகுராஜ் சிங் உத்தர பிரதேசத்தில் தொழிலாளர் அமைச்சராக உள்ளார்.