This Article is From Dec 06, 2019

'அம்பேத்கரின் கொள்கைகளுக்கு எதிரானது' : குடிமக்கள் திருத்த மசோதா குறித்து மாயாவதி கருத்து

அவசர கதியில் சட்டமசோதாவை மத்திய அரசு கொண்டு வருகிறது என்றும், இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது, மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துவது என்று மாயாவதி கூறியுள்ளார்.

'அம்பேத்கரின் கொள்கைகளுக்கு எதிரானது' : குடிமக்கள் திருத்த மசோதா குறித்து மாயாவதி கருத்து

நடைமுறையில் உள்ள குடிமக்கள் சட்டதிருத்த மசோதாவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிரானது என்று மாயாவதி கூறியுள்ளார்.

Lucknow:

குடிமக்கள் சட்ட திருத்த மசோதாவுக்கு தனது கட்சியான பகுஜன் சமாஜ் எதிரானது என்று அக்கட்சியின் தலைவர் மாயாவதி கூறியுள்ளார். இந்த மசோதாவை அவர் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

'பகுஜன் சமாஜ் கட்சி தற்போதுள்ள குடிமக்கள் சட்டதிருத்த மசோதாவுக்கு எதிரானது. அதனை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். அதனை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மத்திய அரசு அனுப்ப வேண்டும்' என்று உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மாயாவதி குறிப்பிட்டுள்ளார். 

மத்திய அரசு அவசர கதியில் சட்டதிருத்த மசோதாவை கொண்டு வருவதாகவும், இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது மற்றும் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

மதத்தின் பெயரால் மக்களை பிளவு படுத்தும் இந்த குடிமக்கள் சட்டதிருத்த மசோதாவை விமர்சித்துள்ள மாயாவதி, 'இது அம்பேத்கரின் கொள்கைகள் மற்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இந்த குடிமக்கள் சட்ட திருத்த மசோதா வலுக்கட்டாயமாக நாட்டில் கொண்டு வரப்படுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். 

மக்களின் நலனுக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் அதனை தனது பகுஜன் சமாஜ் கட்சி வரவேற்கும் என்று கூறியுள்ள மாயாவதி அதற்கு உதாரணமாக காஷ்மீரில் 370 பிரிவு நீக்கப்பட்டதற்கு தனது கட்சி ஆதரவை தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.

குடிமக்கள் சட்டதிருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்க தேசத்திலிருந்து வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அவர்கள் அந்த நாடுகளில் துன்புறுத்தப்பட்டிருப்பார்கள் என்றால் அவர்களுக்கு குடியுரிமையை வழங்க இந்த மசோதா வழி செய்கிறது. 

சர்ச்சைக்குரிய இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. 

குடிமக்கள் சட்ட திருத்த மசோதா 2019 - தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ஷா வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், நாகலாந்து, அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்களை செவ்வாயன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த மசோதா தொடர்பாக நவம்பர் 29,30 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில் வடகிழக்கு மாநிலங்களின் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், செயல்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை செய்தார். 
 

.