Citizenship Bill: இன்று காலை சேனா அரசு வாக்கு வங்கி அரசியலுக்கு விளையாடுவதாக தெரிவித்தது
Mumbai: மக்களவையில் மசோதாவுக்குஆதரவாக வாக்களித்த சிவசேனா இரண்டுநாட்களுக்குப் பிறகு மாநிலங்களவையில் மசோதாவை எதிர்க்கும் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்த மசோதா தொடர்பான உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் அறிக்கையில் “திருப்தி அடையவில்லை” என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சர்ச்சைக்குரிய மசோவுக்கு மக்களவையில் ஆதரவு தெரிவித்தத்தற்காக கூட்டணி கட்சிகள் அதிருப்தி தெரிவித்த நிலையில் சிவசேனா அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது. குடியுரிமை (திருத்த) மசோதா இந்திய அரசியலமைப்பின் மீதான தாக்குதல் அதை ஆதரிக்க எவரும் நாட்டின் அடித்தளத்தை தாக்கி அழிக்க முயற்சிக்கின்றனர்” என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.
இன்று காலை சேனா அரசு “வாக்கு வங்கி அரசியலுக்கு விளையாடுவதாகவும்” இந்து முஸ்லீம் பிளவுகளை உருவாக்க முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியது. “இந்த மசோதா மீதான எங்கள் சந்தேகங்களை நீக்க வேண்டும். எங்களுக்கு திருப்திகரமான பதில்கள் கிடைக்கவில்லை என்றால் மக்களவையில் நாங்கள் எடுத்த நிலைபாட்டை விட வித்தியாசமாக இருக்கும்" என்று சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் கூறினார்.
“வாக்கு வங்கி அரசியலில் விளையாடக்கூடாது. அது சரியானதல்ல. மீண்டுமொரு இந்து -முஸ்லீம் பிளவுகளை உருவாக்க முயற்சிக்காதீர்கள்” என்று மாநிலங்களவையில் சிவசேனாவின் மூன்று உறுப்பினர்களின் ஒருவரான சஞ்சய் ராவத் தெரிவித்தார்.
மக்களவையில் மசோதாவை ஆதாரித்து விட்டு மாநிலங்களவையில் அதற்கு மாறான முடிவினை எடுத்துள்ளது.