This Article is From Dec 14, 2019

குடியுரிமை சட்டம் மேற்குவங்கத்தில்தான் முதலில் அமல்படுத்தப்படும் - பாஜக தலைவர் திலீப் கோஷ்

இதற்கு முன்னதாக 370வது பிரிவை ரத்து செய்வதை எதிர்த்தார். பணமதிப்பிலப்பையும் எதிர்த்தார். ஆனால், அதை மத்திய அரசு செயல்படுத்துவதை நிறுத்தவில்லை. இந்த விஷயத்திலும் புதிய குடியுரிமை சட்டம் மாநிலத்தில் செயல்படுத்தப்படும்”

குடியுரிமை சட்டம் மேற்குவங்கத்தில்தான் முதலில் அமல்படுத்தப்படும்  - பாஜக தலைவர் திலீப் கோஷ்

குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படுவதை மம்தா பானர்ஜியால் தடுக்க முடியாது (File)

Kolkata:

குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் முதல் மாநிலமாக மேற்கு வங்கம் இருக்கும். இதனை முதலமைச்சர் மம்தா பானர்ஜியோ அல்லது அவரது கட்சியான திரிணாமுல் காங்கிரஸால் அதை தடுக்க முடியாது என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்த சட்டத்தினை எதிர்த்து வரும்  மம்தா பானர்ஜி செய்தியாளர் சந்திப்பில் “இந்த சட்டத்தை எந்த சூழ்நிலையிலும் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டேன்” என்று கூறியதை அடுத்து பாஜக தலைவரின் கருத்துக்கள் வந்துள்ளன. 

“இதற்கு முன்னதாக 370வது பிரிவை ரத்து செய்வதை எதிர்த்தார். பணமதிப்பிலப்பையும் எதிர்த்தார். ஆனால், அதை மத்திய அரசு செயல்படுத்துவதை நிறுத்தவில்லை. இந்த விஷயத்திலும் புதிய குடியுரிமை சட்டம் மாநிலத்தில் செயல்படுத்தப்படும்” என்று திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். 

குடியுரிமை திருத்த சட்டம் செயல்படுத்தப்படுவதில் முதல் மாநிலமாக மேற்கு வங்கம் இருக்கும். மம்தா பானர்ஜி ஏன் இந்த சட்டத்தை எதிர்க்கிறார். அவருடைய வாக்கு வங்கியை இழக்க நேரிடும் என்றா?  ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திக் கொள்கிறோம் சட்டம் அமல்படுத்தப்படுவதை மம்தா பானர்ஜியோ அல்லது அவரது கட்சியோ இதை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக இந்த சட்டத்தை எதிர்பார்த்திருக்கும் அகதிகளை பற்றி கவலைபடவில்லை என்றும் கூறினார். 

இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பல தொடர் போராட்டங்களை மம்தா பானர்ஜி முன்னெடுத்துள்ளார். 

கொல்கத்தாவில் சட்டத்தை ரத்து செய்யக்கோரி நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் டயர்களை எரித்தும் போராடினர்.

.