அறுபது ஆண்டுகால குடியுரிமை சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்துகிறார்.
ஹைலைட்ஸ்
- Amit Shah will introduce bill to amend six-decade-old Citizenship Act
- Several opposition leaders have termed the amendment as discriminatory
- The Modi government had introduced the bill in its previous tenure too
New Delhi: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தவுள்ளார். எதிர்க்கட்சிகளும் வடகிழக்கு ஆட்சியாளர்களும் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
பாஜக தலைமையிலான அரசு பத்தாண்டு காலமாக கிடப்பில் போடப்பட்ட இந்த மசோதாவை திருத்தத்துடன் அறிமுகப்படுத்தவுள்ளது . சட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதாக இந்த மசோதா அமையும் என்று ஆளும் அரசு தெரிவித்து வருகிறது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா அறுபது ஆண்டுகால குடியுரிமை சட்டத்தை திருத்துவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்துகிறார். அதன்பின் இது குறித்து விவாதங்கள் எழும். பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் முஸ்லிம் அல்லாத அகதிகள் நாட்டில் குடியுரிமை பெறுவதை எளிதாக்க இந்த சட்டம் முயல்கிறது.
செல்வாக்கு மிக்க வடகிழக்கு மாணவர் அமைப்பு செவ்வாயன்று 11 மணி நேர பணிநிறுத்தத்தை அறிவித்துள்ளது. 1985 ஆம் ஆண்டில் அசாம் உடன்படிக்கையை கிழித்தெறியும் முயற்சி என்று தெரிவித்துள்ளது. குடியேறியவர்களின் மத பிண்ணனியின் அடிப்படையில் குடியுரிமை தரும் மசோதாவை நிறைவேற்றினால் முழுமையான போராட்டத்தை முன்னெடுப்பதாக அச்சுறுத்தியுள்ளன
1955ஆம் ஆண்டின் அசல் குடியுரிமைச் சட்டம், இந்திய குடியுரிமையை எதிர்பார்ப்பவர்கள் 14 ஆண்டுகளில் 11 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று கூறுகிறது. இந்த திருத்தம் முஸ்லிம் அல்லாத விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகளாகக் குறைக்க முன்மொழிகிறது. மேலும் அவர்களின் சட்டவிரோத நிலை தொடர்பான அரசாங்க நடவடிக்கைகளிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கிறது.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் தலைவர் சஷி தரூர் உட்பட பல எதிர்கட்சித் தலைவர்கள் இந்த திருத்தம் பாரபட்சமானது என்று கூறியுள்ளனர்.