Read in English
This Article is From Dec 07, 2019

''குடியுரிமை மசோதா அடக்குமுறையை எதிர்கொள்வோருக்கு உதவியாக இருக்கும்'' : பிரதர் மோடி!!

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேச நாடுகளில் இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்கள் அடக்குமுறைகளுக்கு ஆளானவர்கள் என்றால், அவர்கள் இந்தியாவில் குடியுரிமை கேட்கும்போது அதனை வழங்க குடியுரிமை மசோதா வழிவகை செய்கிறது.

Advertisement
இந்தியா Edited by

மக்களின் வாழ்வில் குறுக்கிடும் அரசுக்கு எதிரானவன் நான் என்று மோடி கூறியுள்ளார்.

New Delhi:

இந்தியாவின் குடியுரிமை மசோதா, அடக்குமுறைக்கு ஆளான மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்றும், அவர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்திய அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். 

இந்துஸ்தான் டைம்ஸின் தலைமைத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது-

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதற்கு முன்பாக மத்தியில் அச்சநிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் தீர்ப்புக்கு பின்னர் அவை அனைத்து தவறானவை என்பதை நிரூபித்து விட்டனர். அயோத்தி தீர்ப்பு என்பது நமக்கு சிறப்பான எதிர்காலம் அமையும் என்பதை நிரூபித்தது. 

Advertisement

நாம் இன்னும் கடந்த காலத்துடன் ஒட்டியிருக்க முடியாது. அண்டை நாடுகளில் நூற்றுக்கணக்கானோர் அடக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர். இந்தியா மீது நம்பிக்கை வைத்திருக்கும் அவர்களுக்கு இந்தியா சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்கும். 

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கினோம். அரசியல் ரீதியாக இது மிகவும் உறுதியான நடவடிக்கை. இருப்பினும், இது மக்கள் மத்தியில் வளர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

மக்களின் வாழ்வில் அரசாங்கம் குறுக்கீடு செய்வதற்கு நான் எதிரானவன். குறுகிய அரசு பரந்த நிர்வாகம் என்பதில் நம்பிக்கை கொண்டவன். 

மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்னைகளை மத்திய அரசு உடனடியாக நிவர்த்தி செய்யும். சிறப்பான எதிர்காலம் அமைவதற்காக அனைத்து தரப்பிலும் பணியாற்றுவது என்பது தேவையாக உள்ளது. சிறந்த நிர்வாகம் நாட்டு மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுக்கும். 

Advertisement

நாட்டில் 15 கோடி வீடுகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்காக எனது அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது. 

5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்காக மத்திய தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது நேரடியாக நடுத்தரக் குடும்பங்களுடன் தொடர்புள்ளதாகவும். இதனால் அவர்களது வாழ்க்கை மேம்படும். 

Advertisement

வங்கித்துறை ஊழியர்கள் எந்தவித அச்ச உணர்வும் இன்றி செயல்பட எனது அரசு நடவடிக்கை எடுக்கும். அவர்களது நேர்மையான பணியின் மீது நாம் கேள்விகளை முன்வைக்கக் கூடாது. 

முன்னதாக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அப்போது அதனை உற்சாகத்துடன் கொண்டாடினோம். பத்திரிகைகள் அதனை பாராட்டி கட்டுரைகள் வெளிவந்தன. வங்கிகளை இணைக்கவும், அவற்றில் முதலீடுகளை ஏற்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பாக, நிதித்துறை, வங்கித்துறை வல்லுனர்களிடம் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதுதொடர்பான வழிகாட்டுதல் விரைவில் வெளியிடப்படும். வங்கித்துறையின் மீது அழுத்தம் உள்ளது. இருப்பினும் அதனை நாங்கள் சரி செய்வோம். 

Advertisement

முந்தைய அரசுகளைப் போல் இல்லாமல் நாங்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். பொய்யான வாக்குறுதிகளை அளிக்காமல் இந்தியாவை செயல்படும் இந்தியாவாக மாற்ற முயற்சி செய்வோம். இதற்கான இலக்குகளைநாங்கள் நிர்ணயித்து விட்டோம். செயல் திறன் எனும் கலாசாரத்தை மேம்படுத்துவோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேச நாடுகளில் இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்கள் அடக்குமுறைகளுக்கு ஆளானவர்கள் என்றால், அவர்கள் இந்தியாவில் குடியுரிமை கேட்கும்போது அதனை வழங்க குடியுரிமை மசோதா வழிவகை செய்கிறது.
 

Advertisement