சோபியான் நகராட்சி அலுவலகத்திற்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர்.
Srinagar: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளால் அதிகம் பாதிக்கப்படும் சோபியான் மாவட்டத்தில் உள்ள நகராட்சி அலுவலகம் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துச் சென்றுள்ளனர்.
சர்ச்சைக்குரிய வகையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற மறுநாளே இந்த சம்பவம் நடந்துள்ளது. அலுவலகத்தின் பெரும்பாலான பகுதிகள் எரிந்து விட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் தெற்கு காஷ்மீரில் உள்ள 4 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜக 132 இடங்களில் 23 இடங்களைக் கைப்பற்றியது.
நகராட்சி அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தீவிரவாதிகளின் சதிச் செயலாக இருக்குமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஒருவாரத்தில் மட்டும் காஷ்மீரின் பல்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.