தனக்கு எதிராக புகார் கொடுத்திருப்பது ஒரு சதி வேலை என்று ராகேஷ் அஸ்தானா கூறியுள்ளார்.
New Delhi: சிபிஐயின் தலைமை அதிகாரியான அலோக் வர்மா, அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரி ராகேஷ் அஸ்தானா இருவருக்குமிடையே முரண்பாடு இருந்து வந்தது. இந்நிலையில், ராகேஷ் அஸ்தானா மீது லஞ்ச புகார் சுமத்தப்பட்டுள்ளது உள் முரண்பாட்டினை அதிகப்படுத்தியுள்ளது.
ராகேஷ் அஸ்தானா அரசாங்காத்திற்கு எழுதிய கடிதத்தில், தன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதை குறிப்பிட்டுள்ளார். அஸ்தானாவின் மீது ஹைதராபாத் தொழில் அதிபர் சதீஷ் சனா புகார் கொடுத்துள்ளார். சதீஷ் சனா, இறைச்சி ஏற்றுமதியாளரான மொயீன் குரோஷி என்பவர் பண மோசடி செய்த வழக்குடன் தொடர்புடையவர் ஆவார்.
சதீஷ் சனா சிபிஐக்கு அளித்த அறிக்கையில், ராகேஷ் அஸ்தானாவிற்கு, 2017 டிசம்பர் மாதத்திலிருந்து 10 மாத காலமாக 2 கோடி கொடுக்கப்பட்டு வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனால், அஸ்தானா மொயீன் குரோஷிக்கு எதிராக இருக்கும் சிபிஐ வழக்கில் செயல்பட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தனக்கும் தன்னுடைய நிர்வாகத்தினருக்கும் இடையே இருக்கும் முரண்பாடுதான் சதீஷ் சனா தன்மீது புகார் கொடுத்துள்ளதற்கு முக்கிய காரணம் என்று அஸ்தானா கூறியுள்ளார். சிபிஐ தலைமை அதிகாரி மற்றும் கண்காணிப்பு ஆணையத்தின் தலைமை அதிகாரி அருண் சர்மா மீது 10 விதமான குற்றசாட்டுகளை கூறியுள்ளார்.
சிபிஐ தலைமை அதிகாரிக்கு மொயீன் குரோஷி வழக்கில். அவருக்கு எதிராக செயல் படாமல் இருப்பதற்காக ரூ.2 கோடி லட்சமாக கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். சதீஷ் சனா வெளிநாடு தப்பிச் செல்ல இருந்ததை தடுத்து, விசாரணைக்கு உட்படுத்தியதால், தன்மீது லட்சப் புகார் எழுந்துள்ளதாக ராகேஷ் அஸ்தான கூறியுள்ளார்.