வந்தே மாதரம் பாட மறுத்த ஆசிரியருக்கு எதிராக போராட்டம்
ஹைலைட்ஸ்
- ‘வந்தே மாதரம் பாடுவது என்னுடைய மத நம்பிக்கைக்கு எதிரானது’ என கூறியுள்ளார்
- ஆசிரியர் தேசிய கொடி ஏற்றிய பின் தேசிய பாடலை பாட மறுத்துள்ளார்
- பிஹார் மாநிலத்தின் கதியார் மாவட்டத்தில் இது நடந்துள்ளது
Katihar, Bihar: ஆசிரியர் ஒருவர் 'வந்தே மாதரம்' பாட மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் மாநிலத்தின் கதியார் மாவட்டத்தை சேர்ந்த அப்சல் ஹுசைன் என்னும் ஆசிரியர் தேசிய கொடி ஏற்றிய பின் தேசிய பாடலை பாட மறுத்துள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் அப்சல் ஹுசைனை தாக்கியுள்ளனர்.
ANI செய்தி நிறுவனத்திற்கு ‘வந்தே மாதரம் பாடுவது என்னுடைய மத நம்பிக்கைக்கு எதிரானது' என அப்சல் ஹுசைன் கூறியுள்ளார்.
‘தேசிய பாடலை அவமதிப்பதை மன்னிக்க முடியாது' என பிஹார் மாநில கல்விதுறை அமைச்சர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மாவட்ட கல்வி அதிகாரி தினேஷ் சந்திரா தேவ் கூறுகையில், ‘இதுவரை எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. நடந்தது உண்மை என்றால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்