This Article is From Aug 10, 2018

அரசு பள்ளி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - டில்லியில் பயங்கரம்

மாணவி காட்டிய அடையாளத்தை வைத்து அரசு பள்ளியில் பணியாற்றி வரும் 37வயது எலக்ட்ரீஷனை கைது செய்துள்ளனர்

அரசு பள்ளி வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - டில்லியில் பயங்கரம்
New Delhi:

புதுடில்லி: அரசு பள்ளி வளாகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது

கடந்த வியாழக்கிழமை அன்று, அரசு பள்ளியில் பணியாற்றி வரும் எலக்ட்ரீஷன் ஒருவர், பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவியை பள்ளி வளாகத்தின் தண்ணீர் பம்பு செட் இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து வெளியில் தெரிவிக்க கூடாது என்றும் மாணவியை மிரட்டியுள்ளார்.

மாலை வீடு திரும்பிய மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால், மாணவியின் பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.

வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய காவல் துறையினர், மாணவி காட்டிய அடையாளத்தை வைத்து அரசு பள்ளியில் பணியாற்றி வரும் 37வயது எலக்ட்ரீஷனை கைது செய்துள்ளனர். பள்ளி நேரம் முடிந்த பின்னர், இந்த சம்பவம் நடைப்பெற்றுள்ளதாக காவல்துறை துணை ஆணையர் மதூர் வெர்மா தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி வளாகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது, டில்லியில் பரப்பரப்பை ஏற்படுதியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், ஜம்மு காஷ்மீர் கத்துவா பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி, கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளானார். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை தொடர்ந்து, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

.