This Article is From Jan 25, 2019

ஆந்திராவில் 2-ம் வகுப்பு சிறுமியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்

பள்ளி தலைமை ஆசிரியரை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

ஆந்திராவில் 2-ம் வகுப்பு சிறுமியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்

ஆளில்லாத அறைக்கு அழைத்து சென்று சிறுமியை பலாத்காரம் செய்ததாக தலைமை ஆசிரியர் மீது புகார் எழுந்துள்ளது.

Hyderabad:

ஆந்திராவில் 42 வயதான பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் 2-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. அவரை கைது செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பள்ளியில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஆளில்லா அறைக்கு அழைத்துச் சென்ற தலைமை ஆசிரியர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமி தனது வீட்டிற்கு ரத்தம் கசிந்த நிலையில் கதறி அழுதபடி திரும்பியுள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். அங்குதான் பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து சிறுமி விவரித்துள்ளார். 

4 தையல் போடப்பட்டு சிறுமியின் ரத்தக்கசிவு நிறுத்தப்பட்டுள்ளது. முதலில் புகார் அளிப்பதற்கு சிறுமியின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். இதுபற்றி அறிந்த சமூக ஆர்வலர்கள் பெற்றோரிடம் பேசி புகார் அளிக்க வைத்துள்ளனர். 

இந்த விவகாரம் ஆந்திர மனிதவளத்துறை அமைச்சருக்கு சென்றுள்ளது. அவரது உத்தரவுப்படி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

.