அப்பா எனக்கு கோடிங் குறித்து பல பாடங்களை கற்றுக் கொடுத்தவர்
Hyderabad: ஹைதராபாத்தில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் டேடா சயிண்டிஸ்ட் பணிக்கு 12 வயது சிறுவனை தேர்வு செய்துள்ளனர்.
ஸ்ரீசைதன்யா பள்ளியில் 7 ஆம் வகுப்பு மாணவர் சித்தார்த் ஸ்ரீவாஸ்தவ் பில்லி என்ற மாணவன் மோன்டைக்னே ஸ்மார்ட் பிசினஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எனக்கு 12 வயது நான் மோன்டைக்னே ஸ்மார்ட் பிசினஸ் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனத்தில் டேடா சயிண்டிஸ்டாக பணிபுரிகிறேன். ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் படிக்கிறேன். செயற்கை நுண்ணறிவியல் குறித்த ஆர்வம்தான் டேட்ட சயிண்டிஸ்டாக மாற உதவியதாக கூறுகிறார்.
சிறுவயதிலிருந்தே தனக்கு கோடிங் எழுதுவதில் இருந்த ஆர்வத்தை என் தந்தை புரிந்து கொண்டு உதவினார். அதற்கு மிக்க நன்றி. “சிறு வயதிலேயே வேலை பெற எனக்கு நிறைய உதவி செய்தவர். எனது அப்பா, எனக்கு கோடிங் குறித்து பல பாடங்களை கற்றுக் கொடுத்தவர். இன்று எனக்கு சாத்தியமான அனைத்துக்கும் அவர்தான் காரணம்” என்று கூறியுள்ளார்