ஹைலைட்ஸ்
- குடகில் ராணுவப் பள்ளியில் இந்த சம்பவம் நடந்துள்ளது
- இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
- 5 ஆசிரியர்கள் போலீஸ் விசாரணை வளையத்தில் உள்ளனர்
Kushalanagar, Karnataka:
கர்நாடக மாநிலம் குடகு மாவடத்தில் இருக்கும் ராணுவப் பள்ளி ஒன்றில் 9 ஆம் வகுப்புப் படிக்கும் 14 வயதுள்ள மாணவன் கழிவறை கொலை செய்யப்பட்டு நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, அந்தப் பள்ளியின் உயர்மட்ட நிர்வாகிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
குடகு சைனிக் பள்ளியில் படித்து வந்தவர் கொலை செய்யப்பட்ட மாணவன். அவரின் தந்தை அதே பள்ளியில் விளையாட்டுத் துறை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியின் துணை தலைமை ஆசிரியரிடம் தனது மகனை ஆசிரயர்கள் சிலர் துன்புறுத்தி வருவதாக புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புகாருக்கு துணை தலைமை ஆசிரியர் செவி மடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து, 14 வயது மாணவன் கழிவறையில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார், கொலை வழக்கு பதிவு செய்து, துணை தலைமை ஆசிரியர் உட்பட 5 ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ’கொலை செய்யப்பட்ட 14 வயது மாணவனை சில ஆசிரியர் காலையில் அழைத்து செய்த தவறுகளுக்காக கண்டித்துள்ளார். இதையடுத்து, அவர் இறந்த நிலையில் கழிவறையில் கிடந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து போலீஸுக்கு பள்ளி நிர்வாகம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும்’ என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாணவன் உயிரிழந்த பிறகு அவரது உடலை, அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு போலீஸிடம் தகவல் கூறாமலேயே பள்ளி நிர்வாகம் ஒப்படைத்துவிட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதை முன் வைத்து மாணவரின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் உடல் ஒப்படைக்கப்பட்ட மருத்துவமனையில் போராட்டம் நடத்தியுள்ளனர்.