This Article is From Jul 23, 2018

பருவநிலை மாற்றத்தால் பயிர் மகசூல் குறையும்: ஆராய்ச்சி முடிவில் தகவல்

நாட்டில் நிலவி வரும் தொடர் பருவநிலை மாற்றத்தால், பயிர் மகசூல் குறையும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளது

பருவநிலை மாற்றத்தால் பயிர் மகசூல் குறையும்: ஆராய்ச்சி முடிவில் தகவல்
New Delhi:

நாட்டில் நிலவி வரும் தொடர் பருவநிலை மாற்றத்தால், பயிர் மகசூல் குறையும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவித்துள்ளதாக ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்யசபா கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஒன்றில், பருவநிலை மாற்றம் இந்திய பொருளாதாரத்தின் முக்கிய விஷயங்களான விவசாயம், நீர், சூழ்நிலை, பல்லுயிர் ஓம்புதல் உள்ளிட்ட பாதிக்கும் என்றும், இமாலய மற்றூம் கடற்கரை பகுதிகளை பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியை விவசாய ஆராய்ச்சிக்கான இந்தியக் கவுன்சில் மேற்கொண்டுள்ளது. எனவே, பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முக்கியமாக பயிர்கள் மற்றும் காடுகளின் வாழ்வியலில் மிகப்பெரிய மாற்றத்தை பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விரைவில் கங்கை நதியை சுத்தப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.