This Article is From Jun 15, 2020

சென்னையில் நாளை முதல் பிற்பகலில் கடைகள் அடைப்பு: வணிகர் சங்கம் முக்கிய அறிவிப்பு!

சென்னையில் கொரோனா தொற்று அதிகமாகப் பரவுவதை கவனத்தில் கொண்டு, நாளை முதல் பிற்பகல் 2 மணியுடன் கடைகளை அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது. 

சென்னையில் நாளை முதல் பிற்பகலில் கடைகள் அடைப்பு: வணிகர் சங்கம் முக்கிய அறிவிப்பு!

சென்னையில் நாளை முதல் பிற்பகலில் கடைகள் அடைப்பு: வணிகர் சங்கம் முக்கிய அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், சென்னையில் நாளை முதல் 30ஆம் தேதி வரை பிற்பகல் 2 மணிக்குப் பிறகு கடைகள் அடைக்கப்படும் என வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து 15வது நாளாக ஆயிரத்தினை கடந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 1,974 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இல்லாத அளவாக 38 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 44,661 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து, சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 31,859 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 347 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று அதிகமாகப் பரவுவதை கவனத்தில் கொண்டு, நாளை முதல் பிற்பகல் 2 மணியுடன் கடைகளை அடைக்கப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வணிகர் சங்க பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் கொரோனா தொற்று அதிகமாகிப் பரவுவதை கவனத்தில் கொண்டு நாட்டின் நலன், மக்கள் நலன், வணிகர் நலன் கருதி நாளை முதல், காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வியாபாரம் செய்து பிற்பகல் 2 மணிக்கு கடைகள் அடைக்க வேண்டும் என்று மத்திய சென்னை, வட சென்னை, தென் சென்னை ஆக மூன்று மாவட்ட நிர்வாகிகள் சேர்ந்து முடிவு செய்யப்பட்டுள்ளது. 

வணிகர்களும், பொதுமக்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், கிருமி நாசினி உபயோகப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

.