சுந்தராபுரம் நான்குவழிச்சாலை அருகே கோவை நோக்கி வந்துகொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்து நிறுத்தம் அருகே நின்றுகொண்டிருந்த மூவரும் ஆட்டோவினுள் இருந்த மூவரும் பலியானார்கள். இவர்களின் குடும்பத்தினருக்கு ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ஒரு இலட்சம் நிதி வழங்க உத்தரவிட்டார்.
மேலும் மூவர் இவ்விபத்தில் காயமடைந்தனர். இவர்களுக்கு நல்ல முறையில் உரிய சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிருவாகத்துக்கும் மருத்துவமனை அதிகாரிகளுக்கும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பலத்த காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் சாதாரண காயமடைந்தவர்களுக்கு 25000ரூபாயும் அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.