This Article is From Jul 24, 2018

ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு 1 லட்ச ரூபாய் இழப்பீடு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், எச்சரிக்கையுடன் செயல்படுமாறு மக்களிடம் வலியுறுத்தினார் முதல்வர் பழனிச்சாமி.  

Advertisement
தெற்கு Posted by

காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபொழுது அடித்து செல்லப்பட்ட நான்கு பேரின் மரணத்திற்கு தன் இரங்கலை தெரிவித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்ச ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும் என அறிவித்தார்.

ஆற்றில் பொதுமக்கள் குளிக்க வேண்டாமென மாவட்ட நிர்வாகம் மற்றும் அதிகாரிகளால் வழங்கப்பட்ட எச்சரிக்கைகளை தாண்டியும், ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் நேற்று சேலத்தில் காவிரி ஆற்றில் குளித்தனர். அந்த ஆறு பேரில், ஐந்து பேர் பரிதாபகரமாக ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இறந்தனர். ஒரு கல்லூரி மாணவர் மட்டும் ஆற்றின் கரையில் இருந்த உள்ளூர் மக்களால் உயிருடன் மீட்கப்பட்டார். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நான்கு பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்னொருவரின் சடலத்தை கண்டுபிடிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிச்சாமி தனது அறிக்கையில் கூறினார்.    

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், எச்சரிக்கையுடன் செயல்படுமாறு மக்களிடம் வலியுறுத்தினார் முதல்வர் பழனிச்சாமி.  
 

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்றுவதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காவிரி நீர் பகுதியிலும், அதன் பாதையிலும், அணையின் தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு பல்வேறு ஊடகங்கள் மூலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாக முதல்வர் கூறினார். 

அணையில் இருந்து நீர் வெளியேறும்போது குழந்தைகள் ஆற்றில் நுழைய அனுமதிக்க வேண்டாம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாகவும், ‘எனினும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் உறுதி செய்ய,ஏரிகள் மற்றும் ஆறுகளில் குளிப்பதற்கு என்று நியமிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மக்கள் குளிக்க வேண்டும்" என்றும்‌ கூறினார் முதல்வர் பழனிச்சாமி. 

ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரையில் உள்ள ஒரு குவாரி ஏரியில் குளிக்க சென்று மூழ்கி இறந்த இருவரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடாக தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார் முதல்வர் பழனிச்சாமி.



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Advertisement
Advertisement