This Article is From Jan 10, 2020

சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!

எஸ்.ஐ. வில்சன் கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். 

சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு!

சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் அறிவிப்பு

சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் உள்ள சோதனைச் சாவடியில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக வில்சன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் வழக்கம்போல் நேற்று முன்தினம் தனது பணியில் இருந்தபோது, அங்கு வந்த இரண்டு பேர் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதில், சம்பவ இடத்திலே வில்சன் பரிதாபமாக உயிரிழந்தார். 

அதனைத் தொடர்ந்து நேற்றைய தினம், 21 குண்டுகள் முழங்க வில்சனின் உடல் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே, அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் இளைஞர்கள் இரண்டு பேர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடியது தெரியவந்தது. 

இதையடுத்து, அவர்களது புகைப்படங்கள் வெளியிடப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வில்சன் கொலை தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக நேற்றைய தினம் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வில்சனை சுட்டுக் கொன்ற குற்றவாளிகளை உடனே கைது செய்ய தென்மண்டல ஐஜிக்கு ஆணையிட்டுள்ளதாக முதல்வர் பேரவையில் தகவல் அளித்தார். 

மேலும் எஸ்.ஐ. வில்சன் கொலை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருந்தார். 

இந்நிலையில், இன்று சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்ஐ வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

.