சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் பற்றி பேசினார். “ சேலம் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் ஒருமுறை பயன்படுத்திய பொருட்களை, மீண்டும் பயன்படுத்தக் கூடாது என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஜனவரி 1, 2019-ம் ஆண்டு முதல் அமலுக்கு வருகிறது. “ என்றார்.
2019, ஜனவரி 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதிப்பு அமலுக்கு வருகிறது.
“பிளாஸ்டிக் உபயோகத்துக்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தடை விதிக்கும் உத்தரவை செயல்படுத்துவதற்காக, சேலம் மாநகர எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலயத்தில் உள்ள கடைகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களும், தண்ணீர் பாக்கெட்டுகளும் விற்பனை செய்ய 1.8.2018 முதல் தடை செய்யப்பட்டது. அது இன்றைக்கு நடைமுறைப்படுத்த இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் விளக்கி பேசினார்.