அமராவதி அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், அமராவதி ஆற்றிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்று அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள அமராவதி பழைய 10 கால்வாய் பாசன பகுதிகளுக்கு 3,694 மி.க.அடிக்கு மிகாமலும், திருப்பூரில் அமராவதி புதிய பாசன பகுதிகளுக்கு 1521 மி.க. அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 5,215 மி.க.அடிக்கு மிகாமலும் வரும் 20-ம் தேதி முதல் 4-12-2018-ம் தேதி வரை தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார்.
இதனால் இரு மாவட்டங்களில் உள்ள 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.