This Article is From Nov 24, 2018

2006ல் சென்டினலிஸால் தாக்கப்பட்ட கடற்படைவீரர் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்!

"அவர்கள் எங்களுடைய ஹெலிகாப்டரிலிருந்து 200 மீட்டர் தொலைவில் இருந்தனர். அவர்கள் கையில் கிடைத்த பொருள்களையெல்லாம் வைத்து ஹெலிகாப்டரை தாக்கினர்" என்று ப்ரவீன் கவுர் தெரிவித்துள்ளார்.

2006ல் சென்டினலிஸால் தாக்கப்பட்ட கடற்படைவீரர் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்!

இரண்டு மீனவர்களின் உடல்களை மீட்க சென்ற கடற்படையினரை, சென்டினல் மக்களின் அம்புகள் தாக்கின.

New Delhi:

சென்டினலிஸ் எனும் மலைவாழ் மக்கள் உலக மக்களின் தொடர்பின்றி 60,000 ஆண்டுகளாக மலைப்பகுதிகளில் வாழுந்து வருகிறார்கள். அவர்கள் அந்தமான் நிகோபர் பகுதியில் அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவரை அம்பு ஏய்து கொன்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. வடக்கு சென்டினல் தீவு தான் இவர்கள் வாழும் பகுதி. இந்த பகுதி பார்வையாளர்கள் பார்வையிடும் பகுதியல்ல என்று அறிவிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. 

ஜான் ஆலன் சாவ் எனும் அமெரிக்கர் தான் அம்பு ஏய்தி கொல்லப்பட்டுள்ளார் என்று கண்டறிந்தபின் கருத்து தெரிவித்துள்ள போலீஸார் அவர்கள் இந்தியாவின் பாதுகாக்கப்படும் சமூகத்தினர். அவர்களை பற்றிய ஆய்வு 30 வருடங்களாக நடந்து வருகிறது. ஆனாலும் அவர்களின் வாழ்க்கை முறை பற்றி அடிப்படை தகவல்கள் மட்டுமே உள்ளது என்று கூறியுள்ளனர். 

இதற்கிடையே 2006ம் ஆண்டு கடற்படையினர், காணாமல் போன இரண்டு மீனவர்களை தேடி சென்ற போது அதன் கமெண்டராக இருந்த ப்ரவீன் கவுர் சென்டனலிஸ் மக்களைப் பற்றி தெரிவித்துள்ளார். ''அவர்கள் எங்களுடைய  ஹெலிகாப்டரிலிருந்து 200 மீட்டர் தொலைவில் இருந்தனர். அவர்கள் கையில் கிடைத்த பொருள்களையெல்லாம் வைத்து ஹெலிகாப்டரை தாக்கினர். அம்புகள் எல்லாப் பக்கங்களில் இருந்தும் தாக்கின. 

இரண்டு மீனவர்களும், அவர்களது படகும் இருப்பதை கண்டறிந்து அங்கு சென்றோம். கடற்கரை ஓரமாக ஹெலிகாப்டரை நிறுத்தி அவர்களை மீட்க சென்றோம். நாங்கள் கொஞ்சம் தாழ்வாக பறந்ததுமே அவர்கள் எங்களை தாக்க துவங்கினர். அவர்கள் சிவப்பு நிற உடையணிந்திருந்தனர். அந்த கூட்டத்தில் நாங்கள் பார்த்தவரை பெண்கள் யாருமில்லை. 0hpr6pfg

எங்களின் ஒரு வீரர் ஒரு மீனவரின் உடலை கைப்பற்றினார். அதற்குள் அவர்கள் மீண்டும் தாக்குதல் நடத்த தயாராகிவிட்டனர். அதனால் நாங்கள் இன்னோரு மீனவரின் உடலை கைப்பற்ற முடியாமல் அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டோம். திரும்ப சிறிய அளவிலான மெஷின் துப்பாக்கிகளுடன் சென்ற போது கூட எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை" என்று கூறியுள்ளார். 

இதற்காக அவருக்கு தட்ரஷாக் பதக்கம் வழங்கப்பட்டது. ஒரு மீனவர் உடலை கைப்பற்றியது மட்டுமின்றி, மோசமான வானிலையில் இந்தச் செயலை செய்து முடித்ததற்காகவும் இந்த விருது வழங்கப்பட்டது. d44c6me8

"இந்திய அரசாங்கம் அவர்கள் தனித்திருப்பதை யாரும் துன்புறுத்தக்கூடாது மற்றும் தொடர்புகொள்ளக்கூடாது" என்று சட்டம் இயற்றியிருந்தது. ஆனால், இந்த வருட ஆரம்பத்தில் இந்த தீவு மற்றும் 28 இடங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் அனுமதி மறுப்பு தடையை, டிசம்பர் 31,2022 வரை நீக்கியது. அதன்படி பார்த்தால் இங்கு வெளிநாட்டவர் அனுமதி செல்லும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. kiinh2f

இவர்கள் மனித தொடர்பற்று இருப்பதால் பார்வையாளர்களிடம் உள்ள சாதாரண காய்ச்சல் கூட மொத்த இனத்தையும் அழித்துவிடும் அபாயம் உள்ளது. 1960ம் ஆண்டு முதல் இவர்களைத் தொடர்பு கொள்ளும் முயற்சிகள் நடைபெற்றுவருகிறது. ஆனால், அவை தோல்வியிலேயே முடிந்துள்ளது. அவர்கள் தனித்திருப்பதில் தீர்க்கமாக உள்ளனர்.  போர்ட் ப்ளேயரிலிருந்து மேற்கே 50 கிமீ தொலைவில் வாழ்கிறார்கள். இவர்களது மொத்த மக்கள் தொகை 150க்குள் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.

.