பரசுராம் வக்மோர் என்ற நபர் கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்றுள்ளார்.
Mumbai: பகுத்தறிவாளர்களான நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே மற்றும் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் ஆகியோரை கொலை செய்த நபரான ஷரத் கலாஸ்கர் சதித்திட்டம் குறித்த வாக்குமூலத்தை கொடுத்துள்ளார். இந்த கொலைகள் அனைத்தும் வலதுசாரி அமைப்புடன் தொடர்புடையது. கடந்த அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் கர்நாடக காவல்துறையினரிடன் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஷரத் கலாஸ்கரின் வாக்குமூலத்தின் பிரதி NDTVயிடம் உள்ளது. அதில் நரேந்திர தபோல்கரை கொன்ற வழக்கில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது. அந்த கொலையில் திட்டமிடல் மற்றும் துப்பாக்கிகளை வாங்கி வரும் பணியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
2017-ஆம் ஆண்டு செப்டர்பர் 5 அன்று வீடு திரும்பி கெளரி லங்கேஷ் தன் வீட்டின் கதவினை திறக்க முற்பட்டபோது அவர்மீது 4 முறை துப்பாக்கியால் சுட்டதாக வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.
2016 இல் ஷரத் கலாஸ்கர் வீட்டில் இந்து மதத்திற்கு எதிராக செயல்படுபவர்களின் பட்டியலை முதலில் தயாரித்துள்ளனர். அந்த பட்டியலில் கெளரி லங்கேஷின் பெயரும் உள்ளது. அதனால் அவர்களை கொல்ல முடிவு செய்தோம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாரத் குர்னே வீட்டில் விரிவாக திட்டமிடப்பட்டுள்ளது.
கெளரி லங்கேஷ் கொலை செய்யும் திட்டத்தை ‘நிகழ்வு' (Event) என்று பெயர் சூட்டியுள்ளனர். சில நாட்களுக்குப் பிறகு பாரத் குர்னே வீட்டின் அருகில் உள்ள மலைக்குச் சென்று துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த பயிற்சியில் ஒவ்வொருவரும் 15 முதல் 20 தோட்டாக்களை சுட்டு பயிற்சி எடுத்துள்ளனர்.
கெளரி லங்கேஷை சுட்டு முடித்ததும் மும்பை -நாஷிக் தேசிய நெடுஞ்சாலையில் துப்பாக்கியின் பாகங்களை வெவ்வேறு திசைக்கு தூக்கி எறிந்துள்ளனர். மத்திய புலனாய்வுத் துறை துப்பாக்கியினை கண்டுபிடிக்க வெளிநாட்டு நிபுணர்களை நியமிக்க வாய்ப்புள்ளது. மகராஷ்டிராவில் நல்ல சோபாராவில் ஆயுதம் ஏந்திய வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் ஷரத் கலாஸ்கர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் இந்த கொலைகள் பலவற்றுக்கும் முக்கிய பங்காற்றியுள்ளது தெரியவந்துள்ளது.