Read in English
This Article is From Aug 30, 2018

கோவையில் வைரலாகும் எல்.பி.ஜி இஸ்திரி பெட்டி!

5 கிலோ எரிவாயு பயன்படுத்தி 800 துணிகளுக்கு இஸ்திரி செய்யும் எல்.பி.ஜி இஸ்திரி பெட்டி

Advertisement
நகரங்கள் (with inputs from ANI)
Coimbatore (Tamil Nadu):

கோவை: துணிகளுக்கு இஸ்திரி போடுவதற்கு, எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தும் முறை கோவையில் பிரபலமாகி வருகிறது.

கோவையைச் சேர்ந்த பிரபு என்பவர், எரிவாயு சிலிண்டர்கள் பயன்படுத்தி துணிகளுக்கு இஸ்திரி போடுகிறார். கரி, மின்சார இஸ்திரி பெட்டி பயன்படுத்துவதனால், ஆபத்துக்கள் ஏற்படும் என்ற அச்சம் இருந்து கொண்டே இருக்கும். மேலும், துணிகள் சேதமடையும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று பிரபு தெரிவித்துள்ளார். 

அதனால், எல்.பி.ஜி இஸ்திரி பெட்டியை அவர் பயன்படுத்தி வருகிறார். மேலும், 5 கிலோ எரிவாயு பயன்படுத்தி 800 துணிகளுக்கு இஸ்திரி செய்யும் வசதி உள்ளதாகவும், ஆபத்து இல்லாத எளிய வகையில் துணிகளுக்கு இஸ்திரி போடலாம் என்பதாலும், எல்.பி.ஜி இஸ்திரி பெட்டி முறையை பயன்படுத்தி வருவதாக பிரபு தெரிவித்துள்ளார்.

எரிவாயு இஸ்திரி முறையை பார்த்து, கோவையில் பலரும் இதை பின்பற்ற தொடங்கியுள்ளனர். எனினும், எரிவாயு சிலிண்டர்களின் விலை குறைந்தால், இஸ்திரி தொழிலில் ஈடுபட்டிருக்கும் பலரும் இந்த வசதியை பயன்படுத்துவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement