Coimbatore News - பனிமடை கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த அந்த சம்பவத்தால், அந்த வட்டாரமே அதிர்ந்தது. (Representational)
Coimbatore: Coimbatore News - கோயம்புத்தூரில் 6 வயதுச் சிறுமியை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபருக்கு, அங்க இருக்கும் போக்ஸோ (POCSO) நீதிமன்றம், தூக்குத் தண்டனை விதித்துள்ளது.
பனிமடை கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்த அந்த சம்பவத்தால், அந்த வட்டாரமே அதிர்ந்தது. சிறுமியின் சடலம் கிடைத்த அடுத்த சில மணி நேரங்களிலேயே சந்தோஷ் குமார் என்னும் நபர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர்தான் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிக் கொலை செய்தார் என்று தெரியவந்தது.
நீதிமன்றத்தில் அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தொடர்ந்து வேகமாக விசாரணை செய்யப்பட்டது. இந்நிலையில்தான் அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடுத் தொகையையும் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.