ஹைலைட்ஸ்
- கோவை இளைஞர் மதன் இந்தப் பயணத்தை மேற்கொள்ள உள்ளார்
- கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணம் செய்யப்போகிறார் மதன்
- 22 நாட்களுக்குள் பயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார் மதன்
Coimbatore (Tamil Nadu): உலக அமைதிக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தன்னந்தனியாக பயணிக்கப் போகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த இளைஞர் மதன்.
கோயம்புத்தூரைச் சேர்ந்த இவர், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்குச் சென்று மீண்டும் அங்கிருந்து கன்னியாகுமரிக்கே வருவார். பின்னர், அங்கிருந்து அவரது சொந்த ஊரான கோவைக்கு வந்தடைவார். ஏறக்குறைய 8,000 கிலோ மீட்டர் தொலைவை இந்தப் பயணத்தின் மூலம் கடப்பார் மதன்.
தனது வண்டியை வெகு நாள் பயணத்துக்கு ஏற்றாற் போல மாற்றியமைத்துள்ள மதன், தேவையான பாதுகாப்பு உபகரணங்களுடன் பயணத்தை நேற்று ஆரம்பித்துள்ளார்.
இந்தப் பயணம் குறித்து மதன், ‘நமது காலக்கட்டத்தில் பலர் உலகம் முழுவதும் ஏதோ ஒரு காரணத்திற்காக சண்டையிட்டுக் கொண்டே இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால், நாம் எல்லோரும் மற்றவரை சகாதரர்களாகவும் சகோதரிகளாகவும் நடத்த வேண்டும் என்று நினைக்கிறேன். இது குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த, இந்த தன்னந்தனியாக செல்லும் பயணத்தைக் கையில் எடுத்துள்ளேன். உலக அமைதிக்காக இந்தப் பயணத்தை மேற்கொள்ள உள்ளேன்’ என்றுள்ளார் உற்சாகத்துடன்.
22 நாட்களில் இந்தப் பயணத்தை முடிக்க திட்டமிட்டுள்ளார் மதன்.