பாம்பை பிடிக்கும் தொழில்முறை நபரை வைத்து பாம்பினை பிடித்துள்ளனர்.
Coimbatore: ஏடிஎம் மிஷினுக்கு வராத விருந்தாளி வந்துள்ளார். பணம் எடுக்குற மிஷின்ல பாம்பு இருந்ததைப் பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 4 அடி நீளப் பாம்பு ஒன்று கோயமுத்தூர் தேனீர்பந்தல் ரோட்டில் உள்ள ஐடிபிஐ வங்கியின் ஏடிஎம் மிஷினில் ஒன்று இருந்துள்ளது. வாடிக்கையாளர்களின் புகாரை அடுத்து மிஷினில் உள்ளே நாகப்பாம்பினை எடுத்துள்ளனர்.
பாம்பை பிடிக்கும் தொழில்முறை நபரை வைத்து பாம்பினை பிடித்துள்ளனர். பாம்பு ஏடிஎம் மிஷனில் இருக்கும் எலெக்ட்டிரிக் வயர்களுக்கு அப்பால் இருந்துள்ளது.
நேற்று கேரளா மாநிலம் கன்னூரில் விவிபாட் மிஷினில் பாம்பு இருந்துள்ளது. அதைக் கண்டு பயந்து போன தேர்தல் அதிகாரிகள் அப்பாம்பை நீக்கிய பின்னரே வாக்குப்பதிவை நடத்தியுள்ளனர்.