இதன் மூலம் உணவுகள் வீணாவது குறைந்துள்ளது என உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
Coimbatore: கோவையில் உள்ள பிரபல உணவகம் ஒன்று உணவு மற்றும் தண்ணீர் வீணாகமல் இருக்க அசத்தலான புதிய யோசனை ஒன்றை கடைப்படித்து வருகிறது.
அதன்படி, உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் வாழை இலையில் பரிமாறப்படும் உணவுகளை வீணாக்காமல் சாப்பிட்டால் டோக்கன் பரிசாக ரூ.5 வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கோவையில் உள்ள RHR சைவ உணவகத்தின் உரிமையாளர் கூறும்போது, இந்த திட்டத்திற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தை நாங்கள் துவங்குவதற்கு முன்பு 95 சதவீத வாடிக்கையாளர்கள் உணவுகளை வீணாக்கி வந்தனர். இந்த திட்டத்திற்கு பின்பே அவர்கள் உணவுகளை வீணாக்க கூடாது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
இது ஒரு சிறிய தொடக்கம் தான். இது அவர்களுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் மூலம் எதிர்காலங்களில் அவர்கள் எந்த உணவையும் வீணாக்க மாட்டார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.
மேலும், அந்த உணவகம் தண்ணீர் வீணாவதை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு அரை கிளாஸ் தண்ணீரை மட்டுமே வழங்குகிறது. வாடிக்கையாளர்களுக்கு மேலும் தண்ணீர் தேவையென்றால் அவர்கள் கேட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை 15 நாட்கள் முன்னதாகவே நாங்கள் துவங்கினோம். எனினும், தினமும் 100 பேருக்கு ரூ.5 நாணயம் வழங்கி வருகிறோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியடைகின்றனர்.
இதுகுறித்து உணவகத்திற்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் கூறும்போது, இது ஒரு நல்ல திட்டம். உணவுகளை வீணாக்குவது என்பது மனித உரிமைகளுக்கு எதிரானது. நான் இந்த 5 ரூபாயை எனக்கு உணவு பரிமாரிய சர்வருக்கு இதனை அளிக்க விரும்புகிறேன். இது பிரதமர் மோடியின் அரசு, இது புதிய இந்தியா. நாம் அனைவரும் இந்தியாவை உயர்த்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
(With Inputs From ANI)