“விதிமீறல்களை ஆன்லைன் மூலம் கண்காணிக்கவே இந்த புதிய நடைமுறையை அமல் செய்துள்ளோம்
Coimbatore, Tamil Nadu: கோயம்புத்தூர் நகர டிராஃபிக் போலீஸுக்கு சட்டையில் கேமரா பதிக்கும் நடைமுறை அமல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் டிராஃபிக் விதிமீறல்களை வெளிப்படைத் தன்மையுடன் கண்காணிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து கோயம்புத்தூர் போலீஸ் கமிஷனர் சுமித் சரண், “விதிமீறல்களை ஆன்லைன் மூலம் கண்காணிக்கவே இந்த புதிய நடைமுறையை அமல் செய்துள்ளோம்.
இதன் மூலம் போலீஸாரும் லஞ்சம் வாங்குகிறார்களோ என்பதை பார்க்க முடியும்.” என்று கூறுகிறார்.
இதுவரை 20 கேமராக்கள் போலீஸாரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. உயிர் என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம் கேமராக்களை ஸ்பான்சர் செய்துள்ளது.