This Article is From Jun 12, 2020

தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து? உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி!

தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் அர்ப்பணிப்பு உணர்வோடு, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். எனவே, இப்போது தேர்வை நடத்துவதற்கு சாத்தியக்கூறு இல்லை.

தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து? உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி!

தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து? உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி!

தமிழகத்தில் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்பது குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கமளித்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து நடந்து கொண்டிருந்த அனைத்து பள்ளி, கல்லூரி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. மேலும் தமிழகம் உள்ளிட்ட சில மாநில அரசுகள், பள்ளி தேர்வுகளை ரத்து செய்தன. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது போல, கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் என மீம்ஸ்கள் பரவியது 

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.பி.அன்பழகன், கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும், நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்ப்டுத்தவும், பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் பயன்படுத்தப்படுகின்றன. 

தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் அர்ப்பணிப்பு உணர்வோடு, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள். எனவே, இப்போது தேர்வை நடத்துவதற்கு சாத்தியக்கூறு இல்லை. கல்லூரிகள் காலியாக இருந்தால்தான், தேர்வுகளை நடத்த முடியும். எனவே, கொரோனா வைரஸ் பாதிப்பு நிவர்த்தி ஆன பிறகுதான் தேர்வு நடத்துவது பற்றி முடிவு எடுக்கப்படும். தேர்வு ரத்தாகுமா என கேட்கிறீர்கள்.

அதில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. ஒவ்வொரு மாணவரின் கல்வித் தரத்தை பிரித்து பார்ப்பதற்கான சாத்தியக்கூறு தேர்வைத் தவிர வேறு கிடையாது. கல்லூரி மதிப்பெண் என்பது எதிர்காலத்தில் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, தேர்வு ரத்து குறித்து, முதல்வருடன் கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும், என கூறியுள்ளார். 

இதற்கிடையில், இப்போது இருக்கக்கூடிய, கொரோனா பரவல் காலகட்டத்தில், பொறியியல் மாணவர்கள், கலை அறிவியல் மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள் பேராசிரியர்கள் என சுமார் 50 லட்சம் பேர் வீட்டை விட்டு வெளியே வர வேண்டிய சூழல் ஏற்படும். இது ஆபத்தாக முடியும் என்று கல்வித்துறை கருதுவது குறிப்பிடத்தக்கது.

.