This Article is From Jul 18, 2018

கோவை மாணவி உயிரிழப்பு சம்பவம்: போலி பயிற்சியாளரை விசாரிக்க அனுமதி

கோவை கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவத்தில், போலி பயிற்சியாளரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

கோவை மாணவி உயிரிழப்பு சம்பவம்: போலி பயிற்சியாளரை விசாரிக்க அனுமதி

கோவை: கோவை கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவத்தில், போலி பயிற்சியாளரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கோவை தனியார் கல்லூரியில், பேரிடர் மேலான்மை பயிற்சி அளித்த போது 19 வயது மாணவியை பயிற்சியாளர் தள்ளி விட்டுள்ளார். பலத்த காயம் அடைந்த லோகேஷ்வரி என்ற அந்த மாணவி, பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசரித்த காவல் துறையினர், கடந்த ஜூலை 13 ஆம் தேதி அன்று போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்தனர். 

போலி பயிற்சியாளரை ஏழு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோரி காவல் துறையினர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அதனை விசாரித்த குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.ஆர் கண்ணன், போலி பயிற்சியாளரை 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார்.  மேலும், குற்றவாளியை வரும் சனிக்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.



(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)

.