Read in English
This Article is From Feb 14, 2019

276 குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்து வீடியோ எடுத்தவருக்கு 60 ஆண்டுகள் சிறை

ஜுவான் கார்லஸ் ஷானெஸ் என்பவர் மாரென்க்வெல்லாவிலில் உள்ள ஷாப்பிங் மால்களிலிருந்து பணத்தை கொடுத்து அவர்களை அவரது இடத்துக்கு அழைத்து வந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

Advertisement
உலகம்

ஷானெஸை, கடந்த நவம்பர் மாதம் வெனிசுலா எல்லையில் கைது செய்துள்ளனர். 

கொலம்பியாவில் 276 இளம் குழந்தைகளையும், பதின் பருவத்தினரையும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி வீடியோ எடுத்து விற்ற‌ நபருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜுவான் கார்லஸ் ஷானெஸ் என்பவர் மாரென்க்வெல்லாவிலில் உள்ள ஷாப்பிங் மால்களிலிருந்து பணத்தை கொடுத்து அவர்களை அவரது இடத்துக்கு அழைத்து வந்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். அதனை வீடியோவாகவும் பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றி விற்பனை செய்துள்ளார். 

30 வயதுடைய ஷானெஸ், போகாட்டாவிலுள்ள லா பிகோடா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணையின் போது அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார்களை ஒப்புக்கொண்டார். 

நீதிபதி அவருக்கு 60 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். சிறுவருக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனை கொலம்பியாவில் இதுதானாம்.

Advertisement

இவரை கடந்த நவம்பர் மாதம் வெனிசுலா எல்லையில் கைது செய்துள்ளனர். இவரை மொக்ஸிகன் போலீஸார் ஒரு வாடிக்கையாளருக்கு 100க்கும் மேற்பட்ட வீடியோக்களை அனுப்பிய போது கைது செய்தனர். 

"இதுபோல் நிறைய பேர் வெனிசுலாவில் உள்ளனர். அவர்களும் அடையாளம் காணப்படுவார்கள்" என்று காவல்துறை கூறியுள்ளது.

Advertisement
Advertisement