This Article is From Jul 11, 2018

ஓரினச்சேர்க்கை குறித்த சட்டம்… உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்து!

ஓரினச்சேர்க்கையை குற்றமாக பாவிக்கும் பிரிட்டானிய கால சட்டம் குறித்தான மேல்முறையீடு மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது

ஓரினச்சேர்க்கை குறித்த சட்டம்… உச்ச நீதிமன்றம் முக்கிய கருத்து!
New Delhi:

ஓரினச்சேர்க்கையை குற்றமாக பாவிக்கும் பிரிட்டானிய கால சட்டம் குறித்தான மேல்முறையீடு மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் சட்ட சாசனப் பிரிவு 377 குறித்து பரலவலான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இது குறித்து கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம், ‘பிரிவு 377, சட்ட சாசனத்தை மீறும் வகையில் இருக்கிறது’ என்று தீர்ப்பளித்தது. ஆனால், 2013 ஆம் ஆண்டு இது தொடர்பான வழக்கில், ‘பரிவு 377 செல்லும்’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதையடுத்து, பிரிவு 377-ஐ முழுவதுமாக சட்டத்திலிருந்து நீக்க உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்தான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிக்ள் நாரிமன், குவாலிகர், சந்திராசுந்த், இந்து மல்ஹோத்ரா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

அப்போது ஒரு மனுதாரருக்காக வாதாடிய வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘377-வது சட்டப் பிரிவு சட்ட சாசனத்திலிருந்து நீக்கப்பட வேண்டும். ஏனென்றால், சட்ட சாசனத்தையே அது மீறும் வகையில் இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் வகுக்கப்பட்ட சட்டங்களே இன்று காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. பின்னர் எப்படி 1860 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டம் தற்காலத்துக்கு பொருந்தும்’ என்று வாதிட்டார்.

பிரிவு 377-ல், ‘யாராவது இயற்கைக்கு மாறாக உடலறவு வைத்துக் கொண்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனையோ அல்லது 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையோ விதிக்கப்படும்’ என்று கூறுப்படுகிறது.

இதையடுத்து நீதிமன்ற அமர்வு, ‘சட்ட சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள பிரிவு 14-ன் கீழிருக்கும் அடிப்படை உரிமைகள், பிரிவு 19-ன் கீழிருக்கும் கருத்து சுதந்திரம் மற்றும் பிரிவு 21-ன் கீழிருக்கும் தனிமனித சுதந்திரம் ஆகியவை 377வது பிரிவு பின்பற்றப்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். 377-வது பிரிவு, கண்டிப்பாக சட்ட சாசனத்தின் அடிப்படை கூறுகளை பின்பற்றும் வகையில் தான் இருக்க வேண்டும். சட்டத்தில் வெற்றிடங்கள் இருக்கக் கூடாது என்பதற்காகத் தான் பிரிட்டானிய காலத்தில் இயற்றப்பட்ட சில சட்டங்கள் இன்னும் நடைமுறையில் இருக்கின்றன. அவைகள் தொடர்ந்து சட்ட சாசனத்தில் ஓர் அங்கமாகத் தொடர சுதந்திரத்துக்குப் பிறகு இயற்றப்பட்ட சாசனத்தின் அடிப்படைக் கூறுகளை மீறக் கூடாது’ என்று கருத்து கூறியுள்ளது.

இதனால், ஓரினச்சேர்க்கையைக் குற்றமாக பாவிக்கும் சட்டம் சீக்கிரமே ரத்து செய்யப்படும் என்று யூகிக்கப்படுகிறது.

.