கூகுள் டூடிலில் ராஷ்டிரபதி பவனை பின்புறத்தில் வைத்து இந்தியாவின் குடியரசு தினத்தை கூகுள் நிறுவனம் கொண்டாடியுள்ளது.
New Delhi: இந்தியாவின் 70 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு கூகுள் நிறுவனம் அதை கொண்டாடும் வகையில் கூகுள் டூடில் ஓன்றை சமர்ப்பணம் செய்துள்ளது.
1947 ஆம் ஆண்டில் இந்தியா விடுதலை பெற்றிருந்தாலும் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பே நமக்கு பூர்ண ஸ்வராஜ் தினமாக கொண்டாடப்படுகிறது. நாட்டின் தலைநகரமான டெல்லியில் உள்ள ராஜபாதையில் நடக்கும் முப்படைவீரர்களின் மரியாதைகள் மற்றும் அணிவகுப்புகளை குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் தொடங்கி வைப்பார்.
அங்கு அமைந்துள்ள தர்பார் ஹாலில் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் தனது பதவி பிரமாணத்தை ஏற்றுக்கொண்டார்.
இன்றைய கூகுள் டூடிலை ஓவியர் ரெஷிதேவ் ஆர்கே என்னும் சிறப்பு விருந்தனர் கூகுளுக்கு செய்தார். நாட்டின் சக்தியின் பிரதிபலிப்பான முப்படை வீரர்களின் அணிவகுப்பு மிகுவும் விசேஷமானது. இதையே தனது மையக்கருவாக வைத்து வண்ணமயமான இந்தியாவின் வளங்களை பிரதிபலிக்கும் குடியரசு தின டூடிலை ரெஷிதேவ் செய்துள்ளார். ராஷ்டிரபதி பவன் பின்புறத்தில் வைத்து இந்தியாவின் பெருமையான கட்டிடக்கலைக்கு சான்றாக அமைந்துள்ளது.
மேலும் இந்த ஆண்டின் சிறப்பு விருந்தினராக தென் ஆப்ரிக்காவின் குடியரசு தலைவரும் தென் ஆப்ரிக்காவின் பாதுகாப்பு துறை கமாண்டருமான மாடாமேலா சிரில் ராமாபோசா வருகை தந்துள்ளார்.
90 நிமிடங்கள் நடைபெறும் இந்த விழாவில் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி குழந்தைகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கு பெருகின்றனர்.