This Article is From Jul 14, 2018

திரையரங்குகளுக்கு வீட்டில் இருந்து உணவை கொண்டு செல்லலாம் : மகாராஷ்ட்ரா அரசு அறிவிப்பு

வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் படம் பார்க்க வருபவர்கள் வெளியில் இருந்து உணவுகளைக் கொண்டு வரலாம் என்று மகராஷ்டிர மாநில அரசு சட்டசபையில் அறிவித்துள்ளது

திரையரங்குகளுக்கு வீட்டில் இருந்து உணவை கொண்டு செல்லலாம் : மகாராஷ்ட்ரா அரசு அறிவிப்பு
Mumbai:

வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் படம் பார்க்க வருபவர்கள் வெளியில் இருந்து உணவுகளைக் கொண்டு வரலாம் என்று மகராஷ்டிர மாநில அரசு சட்டசபையில் அறிவித்துள்ளது.

நகரங்களில் உள்ள மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகளில் படம் பார்க்க வருபவர்கள் வெளியில் இருந்து உணவு கொண்டு வருவதற்கு திரையரங்க நிர்வாகங்கள் அனுமதி அளிப்பது இல்லை.

தங்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், ஸ்நாக்ஸ் எல்லாவற்றையும் அரங்கின் உள்ளே இருக்கும் உணவுக்கடைகளில் மட்டுமே வாங்க வாடிக்கையாளர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

சில நேரங்களில் டிக்கெட் விலையை விட திண்பண்டங்களில் விலை அதிகமாக இருக்கிறது. இதனால், வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

இந்நிலையில், வருகிற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சாதாரண திரையரங்குகள் முதல் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகள் வரை அனைத்திலும் வாடிக்கையாளர்கள் உணவுப் பொருட்களை கொண்டு செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்தான அறிவிப்பை மகாராஷ்டிரா உணவுத்துறை அமைச்சர் வீரேந்திர சவான் நேற்று சட்டசபையில் வெளியிட்டார். இதற்கு பொதுமக்களிடையே வரவேற்பு எழுந்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திற்குள்ளாகவே பிவிஆர் திரையரங்குகளின் பங்குகள் 13% , ஐநாக்ஸ் திரையரங்குகளில் பங்குகள் 11 % குறைந்தது.

கடந்த ஜூன் மாதத்தில், திரையரங்குகளில் விற்கப்படும் திண்பண்டங்களின் விற்பனையை குறைக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மாநில அரசின் பதிலை மும்பை உயர் நீதிமன்றம் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

.