This Article is From Jul 24, 2019

“மாணவர்களின் கையில் பட்டாகத்தி” – நடிகர் விவேக் வருத்தம்!

இந்த வயதில் காதல் வந்தால் அது இதயத்தை மென்மையாக்கும். கல்வி பயின்றால் அது வாழ்கையை மேன்மை ஆக்கும்

“மாணவர்களின் கையில் பட்டாகத்தி” – நடிகர் விவேக் வருத்தம்!

ஹைலைட்ஸ்

  • நடிகர் விவேக் தற்போது விஜய் நடிக்கும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்
  • மாணவர்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருபவர் இவர்
  • இந்தியாவின் பத்ம ஸ்ரீ விருது பெற்ற கலைஞர் இவர்

பொதுமக்கள் அன்றாடும் பயனிக்கும் போருந்தில் புத்தகம் ஏந்தும் மாணவர்களின் கைகளில் பட்டாகத்தியை பார்க்கும் போது இந்த சமூகத்தின் மீதான நம்பிக்கையை பெரிதும் இழக்க நேரிடுகிறது.

ஆம், நேற்று சென்னையை புரட்டிப்போட்ட செய்தி. பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் கையில் பட்டாக்கத்தியுடன் சக மாணவர்களை கண்மூடித்தனமாக மாநரகப் பேருந்தில் தாக்கிய சம்பவம் தமிழ் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இளைஞர்களை அதிகம் கொண்ட நாடுகளில் இந்தியா முதலிடம் என்கிறது ஆய்வறிக்கைகள். இளைஞர்களை அதிக அளவில் கொண்ட நாடு எல்லா துறையிலும் வளச்சி பெற்ற நாடாக இருந்திருக்க வேண்டும். இளைஞர்களின் ஆற்றலை நாட்டின் வளர்சிக்கு பயன்படுத்தி சிறந்த எதிர்காலத்தை உருவாக்கி இருக்க வேண்டும் என்கிற விமர்சனங்கள் பல்வேறு அறிஞர்களால் இன்று வரை முன்வைக்கப்பட்டுதான் வருகிறது.

ஆனால் நாளுக்குநாள் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை, போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக இது போன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுகிறவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் என்பதுதான் மிகப்பெரிய வருத்தம். மாணவர்களின் கையில்தான் இந்நாட்டின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது. இப்படியான பெரும் பொறுப்பு இருக்கும் மாணவர்களின் கையில் பட்டா கத்தியை பார்ப்பது உள்ளபடியே இந்த சமூகம் எதை நோக்கி நகர்கிறது என்கிற மிகப்பெரிய கேள்வி நம் முன் நிற்காமல் இல்லை. அதன் அடிப்படையில் பார்க்கும் போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் இத்தகைய வன்முறை பொது சமூகத்தில் கூடுதல் அச்சத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி இருகிறது. இச்சம்பவம் குறித்து கருத்து பதிவிட்டுள்ள நடிகர் விவேக்,

“மாணவர்களின் கையில் பட்டாகத்தி. கண்டோர் அச்சத்திலும் அதிர்ச்சியிலும். இந்த வயதில் காதல் வந்தால் அது இதயத்தை மென்மையாக்கும். கல்வி பயின்றால் அது வாழ்கையை மேன்மை ஆக்கும். ஆனால் கையில் ஆயுதம் எடுத்தால் எதிர்காலமே உனக்கு எதிரி ஆகிவிடும்” என்று தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.

.