This Article is From Nov 29, 2019

வாக்களர்களுக்கு பணம் விநியோகம்: கர்நாடகா துணை முதல்வர் மீது காங்கிரஸ் புகார்!

இந்த சம்பவம், பெல்லகாவி மாவட்டத்தின் அதானி தொகுதியின் பாஜக வேட்பாளர் மகேஷ் குமாதாலி வீட்டில் வைத்து நிகழ்ந்துள்ளது.

வாக்களர்களுக்கு பணம் விநியோகம்: கர்நாடகா துணை முதல்வர் மீது காங்கிரஸ் புகார்!

அந்த வீடியோவில் கோவிந்த் கார்ஜோல், ஒருவருக்கு பணம் கொடுக்கிறார்.

Bengaluru:

கர்நாடகா துணை முதல்வர் கோவிந்த் கார்ஜோல் தேர்தல் பிரச்சாரத்தின் போது, வாக்களர்களுக்கு பணம் கொடுக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, கர்நாடகா பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அந்த வீடியோவில், கோவிந்த் கார்ஜோல், ஒருவருக்கு பணம் கொடுக்கிறார். இந்த சம்பவம், பெல்லகாவி மாவட்டத்தின் அதானி தொகுதியின் பாஜக வேட்பாளர் மகேஷ் குமாதாலி வீட்டில் வைத்து நிகழ்ந்துள்ளது. 

இதையடுத்து, கர்நாடகா பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி தேர்தல் ஆணையத்திற்கு அளித்துள்ள புகாரில், அதானி தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்கும்படி, வாக்காளர்களுக்கு கோவிந்த் கார்ஜோல் பணம் விநியோகம் செய்துள்ளார். 

கோவிந்த் கார்ஜோல் பணம் விநியோகம் செய்வது, வீடியோவாக தற்போது சமூகவலைதளங்கள் மற்றும் பிற தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 171 (சி) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123 (1) (ஏ) மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் ஆகும் என காங்கிரஸ் உறுப்பினர் பிரிவு புகார் அளித்துள்ளனர். 

 

.