தனது அலுவலகம் இடிப்பதை எதிர்த்து கங்கனா நீதிமன்றத்தினை நாடியுள்ளார்
Mumbai: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக மோசமாக வார்த்தையை பயன்படுத்தியதாக நடிகை கங்கனா மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
செப்டம்பர் 9 அன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட ஒரு வீடியோவில் தாக்கரேவுக்கு எதிராக கேவலமான சொற்களை பயன்படுத்தினார் என்றும், முதல்வரை கண்ணியக் குறைவாக பேசினார் என்றும் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
முன்னதாக விதிமீறல் காரணமாக மும்பையில் உள்ள கங்கனாவின் அலுவலகம் மும்பை மாநகராட்சி ஊழியர்களால் இடிக்கப்பட்டது. தனது அலுவலகத்தினை இடிப்பதை எதிர்த்து நீதிமன்றத்தில் தற்போது அவர் போராடி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னர் கங்கனா மும்பையை பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு பேசியிருந்ததால் ஆளும் சிவசேனா அரசுக்கும் கங்கனாவுக்கும் இடையே மோதல் தொடங்கியது. இந்நிலையில் அவருக்கு மத்திய அரசு ஒய் பிளஸ் பாதுகாப்பினை வழங்கியிருந்தது.
இந்த பின்னணியின் காரணமாக தான் பழிவாங்கப்பட்டதாகவும் அதற்காகத்தான் தன்னுடைய அலுவலகம் இடிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தன்னுடைய வீடியோவில், “உத்தவ் தாக்கரே, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் திரைப்பட மாஃபியாவுடன் இணைந்து, என் வீட்டை இடித்துவிட்டு, என்னைப் பழிவாங்கினீர்களா? என் வீடு இன்று இடிக்கப்பட்டது, உங்கள் ஆணவம் நாளை நொறுங்கும்.” என குறிப்பிட்டு பேசியிருந்தார். மேலும், “இது காலத்தின் சக்கரம். நினைவில் கொள்ளுங்கள், அது ஒருபோதும் அப்படியே இருக்காது” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
குடிமை அமைப்பின் நடவடிக்கையை எதிர்த்து நடிகர் மனு தாக்கல் செய்ததையடுத்து, இடிப்பு உயர்நீதிமன்றத்தால் நேற்று நிறுத்தப்பட்டது.
இன்று பிற்பகல் பம்பாய் உயர் நீதிமன்றம் விசாரணைக்கு வந்த இது குறித்த வழக்கானது ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு இப்போது செப்டம்பர் 22-ம் தேதி விசாரிக்கப்படும்.