ஸ்மிருதி இரானியின் மீதான வழக்கு வரும் அக்.29 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது
Sitamarhi, Bihar: வயது வந்த பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது சித்தமாரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமையன்று மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்மிருதி பேசுகையில், பெண்களுக்கு வழிபட உரிமை உண்டு. ஆனால் வழிபடும் இடங்களை அவமதிக்க உரிமையில்லை என்று கூறினார்.
அவரது சர்ச்சை பேச்சினால் வழக்கு தொடரப்பட்டது. தன்னுடைய கருத்தினை இரையாக பயன்படுத்தி தன்னை சர்ச்சைக்குள் இழுத்து விட்டதாக, ஸ்மிருதி இரானி டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சித்தாமாரி நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சரோஜ் குமாரி முன்னிலையில், வழக்கறிஞர் தாகூர் சந்தன் சிங் வழக்கினை தாக்கல் செய்யதார்.
செப்.28ம் தேதி உச்சநீதிமன்றம் சபரிமலைக்கு வயது வந்த பெண்கள் செல்ல கூடாது என்றிருந்த தடையை நீக்கினார். இருப்பினும் தற்போது வரை பெண்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் போராட்டகாரர்கள் தடுத்து வருகிறார்கள்.
ஸ்மிருதி இரானி மீது இந்திய தண்டனை சட்டம் 120பி, 124ஏ, 353 மற்றும் 354ன் கீழ் வழக்கி தொடரப்பட்டுள்ளது.