বাংলায় পড়ুন Read in English
This Article is From Mar 23, 2020

உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை முழு ரத்து!! கொரோனா பாதிப்பால் மத்திய அரசு அதிரடி!

உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமார் 3 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகவும் அபாயகரமான இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு நேரடி தொடர்பு, வியர்வை, தும்மும்போதும், இருமும்போதும் நீர் சிதறல்களாகப் பரவுகிறது.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • வெளிநாட்டு விமான சேவை ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது
  • புதன்கிழமை முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை நிறுத்தப்படும்
  • இந்தியாவில் 19 மாநிலங்கள் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளன.
New Delhi:

புதன்கிழமை முதற்கொண்டு உள்நாட்டு விமானப்போக்குவரத்து சேவை முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. கொரோனா பரவுதல் தடுப்பில், இது முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

உள்நாட்டில் இயங்கும் அனைத்து விமானங்களும் செவ்வாயன்று இரவு 11.59-க்குள் தரையிறங்கப்பட்டிருக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. இருப்பினும், சரக்கு விமானங்கள் தொடர்ந்து இயங்கும்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் ஏற்கனவே ஒரு வாரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்ந்திருக்கும் நிலையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. 

Advertisement

டெல்லிக்கு விமானம் ஏதும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று அறிவித்திருந்தார்.

புதன் அன்று முதல் உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டாலும், அதுவரையில் விமானங்களில் நேர மாற்றம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இன்று காலையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அவரது மாநிலத்திற்கு விமானங்களைக் கொண்டுவர அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்திருந்தார். ஏற்கனவே மாநிலத்தில் பஸ், ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் விமானம் மட்டும் இயங்கி வருவதாகவும், இது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் மம்தா தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது புதிய நடவடிக்கையாக நாட்டில் மொத்தம் 19 மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமார் 3 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மிகவும் அபாயகரமான இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு நேரடி தொடர்பு, வியர்வை, தும்மும்போதும், இருமும்போதும் நீர் சிதறல்களாகப் பரவுகிறது. 

Advertisement