முழு ஊரடங்கு என்பது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை: ஜெயக்குமார்
ஹைலைட்ஸ்
- முழு ஊரடங்கு என்பது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை
- மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மரண விகிதம் நம் மாநிலத்தில் குறைவு.
- தொடர்பை துண்டிக்க வேண்டும் என்றால் முழு ஊரடங்கு அத்தியாவசியம்
முழு ஊரடங்கு என்பது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மருத்துவ முகாமில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
முழு ஊரடங்கு என்பது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கை. நோய்த்தொற்று ஏற்பட்டு பரவும் அந்த தொடர்பை துண்டிக்க வேண்டும் என்றால் முழு ஊரடங்கு அத்தியாவசியம். உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து வழக்கு தொடரப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஜனநாயகத்தில் சட்டமன்றம், நீதித்துறை, நிர்வாகம் உள்ளது. நீதித்துறையை யார் வேண்டுமானாலும் நாடலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது.
அவர்கள் நீதிமன்றம் போகட்டும் நாங்கள் உரிய பதிலை அளிப்போம். சென்னை, டெல்லி, மகாராஷ்டிரா, பெரிய மாநகராட்சிகளை ஒப்பிடும்போது சோதனை அதிகம் செய்வது நாம் தான். மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது மரண விகிதம் நம் மாநிலத்தில் குறைவு.
மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது குணமடைந்தவர்கள் சதவிகிதமும் நம் மாநிலத்தில் அதிகம். ஆகவே அவர் தாராளமாக நீதிமன்றம் போகட்டும். அரசு வெளிப்படையாக உள்ளது. உரிய தகவலை தினமும் வெளியிடுகிறோம். உரிய தகவலை அளிப்போம்.
அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதில்லை, எதிர்க்கட்சிகளை அழைக்காததற்கு காரணம் இது மருத்துவம் சார்ந்த ஒரு விவகாரம், காவிரி பிரச்சினை, இட ஒதுக்கீடு போல ஆலோசனை நடத்தும் அவசியம் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.