This Article is From Aug 10, 2019

ஊடக சுதந்திரத்தை அடிபணிய வைக்க NDTV நிறுவனர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட செயல்

NDTVயின் நிறுவனர்களான இருவரும் ஒரு வாரம் வெளிநாட்டில் செல்ல திட்டமிடப்பட்டிருந்தனர், அவர்கள் 15 ஆம் தேதி திரும்பி வருவது என்பது முன்பதிவு செய்யப்பட்டது.

ஊடக சுதந்திரத்தை அடிபணிய வைக்க NDTV நிறுவனர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட செயல்


அடிப்படை உரிமைகளை பறிக்கும் விதமாகவும் ஊடகத்திற்கான நெறிமுறையிலிருந்து தவறச்செய்து  நெகிழ்வுடன் செயல்பட வைக்க முயல்வது வெட்கக் கேடானது.

என்டிடிவி நிறுவனர்களான ராதிகா மற்றும் பிரணாய் ராய் ஆகியோர் வெளிநாட்டிற்கு செல்லவது நேற்று தடுத்து நிறுத்தப்பட்டது; NDTVயின் நிறுவனர்களான இருவரும் ஒரு வாரம் வெளிநாட்டில் செல்ல திட்டமிடப்பட்டிருந்தனர், அவர்கள் 15 ஆம் தேதி திரும்பி வருவது என்பது முன்பதிவு செய்யப்பட்டது. 
இந்நிலையில் ஐ.சி.ஐ.சி.ஐ கடன் குறித்து சிபிஐ தாக்கல் செய்த ஒரு போலி மற்றும் முற்றிலும் ஆதாரமற்ற ஊழல் வழக்கின் அடிப்படையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர், இது அவர்களின் நிறுவனமான ஆர்ஆர்பிஆர் எடுத்தது, கடன் யாவும் முன்பே வட்டியுடன் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்டது. 
இந்த வழக்கு இரண்டு ஆண்டுகளாகடெல்லி உயர்நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது. ராதிகா மற்றும் பிராணோய் ராய் ஆகியோர் இந்த வழக்கில் முழுமையாக ஒத்துழைத்து வருகின்றனர், அவர்கள் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டிற்குத் திரும்பி வருகிறார்கள், ஆனால் தற்போது மட்டும் அவர்கள் வெளிநாட்டிற்கு செல்வது ஆபத்தானது என்று கூறுவது நகைப்புகுரியது. இன்றைய நடவடிக்கை குறித்து அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கவில்லை. ஊடக நிறுவனர்களின் மீதான இத்தகு நடைமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது