বাংলায় পড়ুন Read in English
This Article is From Aug 12, 2019

“புதிய இந்தியாவுக்கு வாழ்த்துகள்!”- தொடர் ‘மிரட்டல்’… ட்விட்டரிலிருந்து விலகிய பிரபல இயக்குநர்!

அனுராக்கின் ரசிகர்கள், அவர் மீண்டும் ட்விட்டருக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

Advertisement
இந்தியா Edited by

Highlights

  • ஆன்லைன் மிரட்டல்களைத் தொடர்ந்து ட்விட்டரிலிருந்து அனுராக் விலகியுள்ளார்
  • என் மனதில் பட்டதைப் பேச முடியவில்லை: அனுராக்
  • அனுராக் ரசிகர்கள், மீண்டும் அவர் ட்விட்டருக்கு வரவேண்டும் என வலியுறுத்தல்
New Delhi:

ட்விட்டரில் வெளிப்படையாக பேசியதால் தனது குடும்பத்துக்குத் தொடர்ந்து மிரட்டல் வருவதாக சொல்லி, பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், ட்விட்டர் தளத்திலிருந்து வெளியேறினார். அனுராக், ‘இமைக்கா நொடிகள்' தமிழ்த் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த ஜூலை 23 ஆம் தேதி, திரைப் பிரபலங்கள் பலர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வெளிப்படையாக ஓர் கடிதத்தை எழுதினார்கள். அதில், “கும்பல் வன்முறைக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். ஜெய் ஸ்ரீ ராம் என்கிற கோஷம் வன்முறைக்காக பயன்படுத்தப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதைத் தொடர்ந்து தனது கடைசி ட்வீட்டில், அனுராக், “உங்கள் பெற்றோருக்கு அழைப்புகள் வரத் தொடங்கும் போதும், உங்கள் மகளுக்கு ஆன்லைனில் மிரட்டல் வரும் போதும் நீங்கள் பேசக் கூடாது என்பது புரியும். தர்க்கமான முறையில் உங்களால் எதுவும் பேச முடியாது. ரவுடிகள்தான் அதிகாரம் செலுத்துவார்கள். இந்த புதிய இந்தியாவுக்கு வாழ்த்துகள்.
 

அனுராக் காஷ்யப் ட்வீட்டின் ஸ்க்ரீன் ஷாட்

உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியும் வெற்றியும் குவியட்டும். நான் ட்விட்டரிலிருந்து வெளியேறுவதால் இதுவே எனது கடைசி ட்வீட்டாக இருக்கும். பயம் இல்லாமல் என் மனதில் பட்டதைப் பேச முடியாது என்றால் நான் பேசவே போவதில்லை. குட் பை” என்று கோபத்துடன் பதிவிட்டிருந்தார். 

மற்றொரு ஸ்க்ரீன் ஷாட் படம்

அனுராக் காஷ்யப் சமூகத்தில் நடக்கும் அவலங்களை பிரதிபலிக்கும் வகையில் பல இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார். அனுராக்கின் ரசிகர்கள், அவர் மீண்டும் ட்விட்டருக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால், சிலரோ அவரின் இந்த முடிவை விமர்சனம் செய்து வருகிறார்கள். 

Advertisement

கடந்த மாதம், ஒரு நபர், அனுராக் காஷ்யப்பிற்கு ட்விட்டர் மூலம் மிரட்டல் கொடுக்கவே, அவர் போலீஸில் அது குறித்து புகார் தெரிவித்திருந்தார். 
 

Advertisement