This Article is From Aug 29, 2018

ரஃபேல் ஒப்பந்த விவகாரம் - ராகுல் காந்தியை நோக்கி நிதி அமைச்சர் 15 கேள்விகள்

ரஃபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி எழுப்பி வரும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார்.

New Delhi:

ரஃபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தம் குறித்து ராகுல் காந்தி எழுப்பி வரும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார். ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட நிறுவனம் தேர்வு, அதிக பணத்துக்கு ஒப்பந்தம் என பல முறைகேடுகள் இருப்பதாக மோடி அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை என்று கூறும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, காங்கிரஸ் கட்சியை நோக்கி 15 கேள்விகளை தனது ஃபேஸ்புக் பதிவில் கேட்டுள்ளார்.

c6v475l8

“ இது கிண்டர் கார்டன் பள்ளி விவாதம் போல இருக்கிறது. நான் 500 கொடுத்தேன், நீ 1600 கொடுத்த என்பது போல தான் அவர்கள் கூறுவது இருக்கிறது. இது ராகுல் காந்திக்கு எவ்வளவு குறைவான புரிதல் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது” என்று அவர் பேசியுள்ளார்.

முதலில் ரஃபேல் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டது காங்கிரஸ் தான் என்பதை ராகுல்காந்திக்கு நினைவுபடுத்தியுள்ளார் ஜெட்லி. “ அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ததால், தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்படுத்தியது காங்கிரஸ்” என்று அவர் கூறியுள்ளார்.
 

psbmif3g

Tஃபெரெஞ்சு தசால்ட் ரஃபேல் மல்டி ரோல் ஜெட் போர் விமானத்தை வாங்க 2012-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. 18 விமானங்களும், 108 மற்ற விமானங்களும் இந்தியாவில் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸில் அசெம்பிள் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது.

.