5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளியாகி வருகிறது. வடகிழக்கு மாநிலமான மிசோரமில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன.
இங்கு 21 இடங்களை கைப்பற்றும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.
அந்த வகையில், தேசிய கட்சிகளான பாஜகவும், காங்கிரசும் இங்கு தடுமாறி வருகின்றன.
மாநில கட்சியான மிசோரம் தேசிய முன்னணி இங்கு 25 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அக்கட்சிதான் ஆட்சியை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிசோரம் தேசிய முன்னணி (எம்.என்.எஃப்)கட்சி தொண்டர்கள் இனிப்புகளை வழங்கி வருகின்றனர்.