This Article is From Sep 25, 2018

மத்தியப் பிரதேச பொது கூட்டத்தில் காங்கிரஸை கடுமையாக விமர்சித்த பிரதமர் மோடி!

“பாஜக மீது காங்கிரஸ் எந்த அளவுக்கு சேற்றை வாரி இறைக்கிறதோ, அந்த அளவுக்கு சிறப்பாக தாமரை மலர்ந்துக் கொண்டேதான் இருக்கும்” என்று பிரதமர் மோடி(PM Modi) தெரிவித்துள்ளார்

கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி (PM Modi), காங்கிரஸ் கட்சியினை கடுமையாக விமர்சனம் செய்தார்

New Delhi:

“கூட்டணி அமைக்க சிறிய கட்சிகளிடம் காங்கிரஸ் கெஞ்சுகிறது. காங்கிரஸ் உள்நாட்டில் கூட்டணி அமைப்பதில் தோல்வி அடைந்தது, எனவே இந்தியாவிற்கு வெளியே கூட்டணி அமைக்க முயற்சி செய்கிறது.” என்று பிரதமர் மோடி (PM Modi) தெரிவித்துள்ளார்

மேலும், “உலகம் முழுவதும் இஸ்லாமிய நாடுகளில் கூட முத்தலாக் முறை ஏற்கப்படுவதில்லை என்றும், ஆனால் இங்கு வாக்கு வங்கி அரசியலுக்காக முத்தலாக்கால் பாதிப்புக்கு உள்ளாகும் முஸ்லிம் சகோதரிகளைப் பற்றி காங்கிரஸ் கவலைப்படுவதில்லை” என்றும் புகார் கூறினார்.

“பாஜக மீது காங்கிரஸ் எந்த அளவுக்கு சேற்றை வாரி இறைக்கிறதோ, அந்த அளவுக்கு சிறப்பாக தாமரை மலர்ந்துக் கொண்டேதான் இருக்கும்” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

இக்கூட்டத்தில், பாஜக தலைவர் அமித்ஷா, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

.