ராகுல் காந்தி 2017 ஆண்டு தன் ட்விட்டர் பக்கத்தில் தன் வளர்ப்பு நாயான ‘பிடி’யை அறிமுகப்படுத்தினார்.
New Delhi: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் தனது வீடான துக்ளக் லேன் வீட்டை விட்டு காரில் வெளியில் தன் வளர்ப்பு நாயான பிடியுடன் ஜாலி ரைடு சென்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.
ராகுல் காந்தி 2017 ஆண்டு தன் ட்விட்டர் பக்கத்தில் தன் வளர்ப்பு நாயான ‘பிடி'யை அறிமுகப்படுத்தினார்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவிய நிலையில் தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் பிடிவாதமாக இருந்து வருகிறார் ராகுல் காந்தி. காங்கிரஸ் காரியக் கமிட்டியில் தன் முடிவை அறிவித்த பின் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றை தவிர்த்து வருகிறார்.
இந்த புகைப்படத்தில் ராகுல் காந்தி மற்றும் வளர்ப்பு நாய் பிடியுடன் இருப்பதை பார்க்கலாம். 2017 ஆம் ஆண்டில் ‘பிடி' ராகுல் காந்திக்கு பல வகையிலும் பிரபலத்தை தேடிக் கொடுத்தது.
தேசிய தேர்தலில் காங்கிரஸ் 52 இடங்களை மட்டுமே பெற்றது. பாஜக பெரும்பான்மையான இடங்களை பெற்றது. ராகுல் காந்தியின் இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் சந்தித்து ராகுல் காந்தியின் பதவி விலகும் முடிவினை மாற்றுமாறு தெரிவித்துள்ளனர். மூத்த தலைவர் ஷீலா தீக்ஸித் பதவி விலக வேண்டாம் என்று வற்புறுத்தியுள்ளார்.
லல்லு பிரசாத் யாதவ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் ஆகியவை ராகுல் காந்தியின் முடிவை மறுபரிசீலனை செய்ய வற்புறுத்தி வருகின்றனர்.